Evil Eye : கண் திருஷ்டியால் வீட்டில் கெட்டது நடக்குதா? இந்த 4 பரிகாரங்களை செய்து பாருங்க!

Published : Jun 26, 2026, 11:41 AM IST

Evil Eye : சந்தோஷமா இருக்கிற உங்க குடும்பத்து மேல கெட்ட கண் படாம இருக்கணுமா? அப்போ, வாஸ்து சாஸ்திரத்துல சொல்ற இந்த 4 பவர்ஃபுல் பரிகாரங்களை தெரிஞ்சுக்கோங்க. இது வீட்டுல இருக்குற நெகட்டிவ் எனர்ஜியை நீக்கி, உங்க வாழ்க்கையில சந்தோஷத்தை கொண்டு வரும்.

PREV
15
கண் திருஷ்டியால் வீட்டில் கெட்டது நடக்குதா?
சில சமயம், வாழ்க்கையில எல்லாம் நல்லா போயிட்டு இருக்குனு நினைக்கும்போது, திடீர்னு கெட்ட சம்பவங்கள் நடக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும், கையில காசு நிக்காது, முன்னேற்றம் தடைபடும், வேலைகள் பாதியில நிக்கும், குடும்பத்துல தேவையில்லாத சண்டை சச்சரவு வரும். இதுக்கு காரணம், அடுத்தவங்களுடைய கெட்ட கண் நம்ம வீட்டு மேல படுறதுதான். இந்த மாதிரி நேரத்துல என்ன செய்யணும்னு பார்க்கலாம்.
25
நெகட்டிவ் எனர்ஜி

எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியும் முதல்ல வீட்டு வாசப்படி அல்லது ஜன்னல் வழியாதான் உள்ளே வரும். அதனால, வீட்டு நுழைவாயிலை தோஷம் இல்லாம வெச்சுக்கிறது ரொம்ப முக்கியம். இதுக்கு, வாரத்துக்கு ரெண்டு முறை, குறிப்பா செவ்வாய், சனிக்கிழமைகள்ல, வீடு துடைக்கும்போது தண்ணியில கொஞ்சம் கல் உப்பை கலந்து துடைங்க. இதனால நெகட்டிவ் எனர்ஜி விலகிடும்.

35
படிகார பரிகாரம்
உங்க குடும்ப உறுப்பினர் உடல்நலம், குழந்தைகளின் படிப்பு, அல்லது உங்க தொழில் வளர்ச்சி கண் திருஷ்டியால பாதிக்கப்பட்டிருக்குனு தோணுச்சுனா, இந்த படிகார பரிகாரத்தை செய்யுங்க. ஒரு சுத்தமான கறுப்பு துணியில சின்ன படிகாரத் துண்டை கட்டுங்க. இந்த மூட்டையை உங்க வீட்டு நிலைவாசலுக்கு மேல, உள்ளேயோ அல்லது வெளியேயோ தொங்க விடுங்க. நீங்க வேலை பார்க்குற இடத்துல உங்க கடை கவுன்டர் அல்லது ஆபீஸ் கேபின்லயும் மறைச்சு வைக்கலாம். இது தீய சக்திகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
45
ஸ்வஸ்திக்

வாஸ்து சாஸ்திரத்துல, நிலைவாசலை ரொம்ப புனிதமா கருதுவாங்க. நிலைவாசலுக்கு சக்தி கொடுப்பதன் மூலம், எந்த தீய சக்தியும் வீட்டுக்குள்ள வராம தடுக்கலாம். உங்க வீட்டு நிலைவாசலுக்கு மேல குங்குமப்பூவையும், பசு நெய்யையும் கலந்து 'ஸ்வஸ்திக்' அல்லது 'ஓம்' சின்னத்தை வரைங்க. பஞ்சமுகி அனுமன் படம் அல்லது குதிரை லாடம் கூட மாட்டலாம்.

Viral Video: பணத்தை பிரசாதமாக தரும் கருப்பசாமி! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவிலா?

55
கற்பூரத் துண்டு

சாஸ்திரப்படி, சூரியன் மறையும் நேரத்துல, அதாவது சாயங்கால வேளையிலதான் நெகட்டிவ் எனர்ஜியும், கண் திருஷ்டி பாதிப்புகளும் ரொம்ப அதிகமா இருக்கும். இதை சரிசெய்ய, தினமும் சாயங்காலம் 2-3 கற்பூரத் துண்டுகளையும், 2 கிராம்பையும் ஒரு மண் அகல் அல்லது பித்தளை பாத்திரத்துல வைங்க. அதை ஏற்றி, அந்த புகையை வீடு முழுக்க எல்லா மூலை முடுக்குலயும் காட்டுங்க. இதனால வீட்டுச் சூழல் சுத்தமாகும்.

Numerology : உங்களை கோடீஸ்வரராக்கும் மொபைல் எண்! மொபைல் எண்ணில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

Read more Photos on
click me!

Recommended Stories