அடேங்கப்பா! சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை லட்சமா? 1.887 கிலோ தங்கம்! 2.527 கிலோ வெள்ளி!

Published : Apr 27, 2024, 08:43 AM ISTUpdated : Apr 27, 2024, 08:45 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 7 நாட்களில் உண்டியல் காணிக்கை 67.80 லட்சம் ரூபாய் ரொக்கம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
அடேங்கப்பா! சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை லட்சமா? 1.887 கிலோ தங்கம்! 2.527 கிலோ வெள்ளி!
Samayapuram Mariamman Temple

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

23
Trichy Samayapuram

அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர்  கல்யாணி  தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள்,  வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.  
 

33
Undiyal Collection

கடந்த 7 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.67 லட்சத்தி 80 ஆயிரத்து 962  ரூபாய் ரொக்கம், 1.897 கிலோ தங்கம், 2.527 கிலோ வெள்ளி. 59 அயல்நாட்டு நோட்டுகளும், 959 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத்  கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

click me!

Recommended Stories