சித்ரா பௌர்ணமி 2024 : திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது சொல்லலாம்..? உகந்த நேரம் என்ன..?

First Published | Apr 22, 2024, 11:41 AM IST

நாளை சித்ரா பௌர்ணமி. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாக தெரிவித்துள்ளது..
 

கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தான். இது உலகில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக, பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். 

Tap to resize

திருவண்ணாமலை கோவிலில் பல சிறப்புகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்த மலையை மக்கள் சிவனாக வழிபடுவது தான் 
மற்றொரு சிறப்பு அம்சமாகும். காரணம், லிங்கமே மலையாக இருப்பதால் தான்.

அதுமட்டுமின்றி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று நம் முன்னோர்கள்  சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த திருவண்ணாமலை கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, இப்படி பல சிறப்பு அம்சங்கள் இந்த கோவிலில் இருப்பதால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதையும் படிங்க: Chitra Pournami 2024: சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? குட்நியூஸ் சொன்ன அரசு போக்குவரத்து கழகம்!

இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்னவென்றால், ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அதாவது நாளை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

எனவே, நாளை  சித்ரா பவுர்ணமி என்பதால் அந்நாள் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!