Chitra Pournami 2024: சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? குட்நியூஸ் சொன்ன அரசு போக்குவரத்து கழகம்!

First Published | Apr 21, 2024, 9:00 AM IST

சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 

tiruvannamalai chitra pournami

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 22, 23ம் தேதிகளில் ஏராளமானோர் பயணிப்பர். இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Pournami Girivalam

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 22ம் தேதி 527 பேருந்துகளும், 23ம் தேதி 628 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 22ம்தேதி 30 பேருந்துகளும், 23ம் தேதி 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

இதையும் படிங்க: Chitra Pournami 2024: சித்ரா பௌர்ணமி 2024 எப்போது? அதன் சிறப்பு, முக்கியத்துவம் என்ன?

Tap to resize

Government AC Bus

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்துகள் 40, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம்தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். 

Transport Department

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த வசதியினை பொதுமக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Latest Videos

click me!