பொதுவாகவே, இந்து மதத்தில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உண்டு. அவற்றை முறையாக பின்பற்றினால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சாஸ்திரங்களின்படி, ஆண்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆண்கள் செய்யக் கூடாதவை:
கோயிலிலோ அல்லது வீட்டு பூஜை அறையிலோ எரிந்து கொண்டிருக்கும் விளக்கை ஆண்கள் அணைக்கவோ அல்லது விளக்கேற்றவோ கூடாது.
அதுபோல், வெள்ளிக்கிழமை அன்றும், அமாவாசை அன்றும் ஆண்கள் ஒருபோதும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவே கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கடன் வாங்கவே கூடாது.
முக்கியமாக, திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கடலில் குளிக்கவோ, முடி அலங்காரம் செய்யவோ அல்லது மலையேறி சாமி வழிபாடு செய்யவோ கூடாது.
அதிலும் குறிப்பாக, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவோ, மரங்களை வெட்டவோ அல்லது எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லவே கூடாது.
மயானத்திற்கு சென்று வந்த பிறகு ஆண்கள் தலைக்கு வெந்நீரால் குளிக்க வேண்டாம். தலை முடி வெட்டிய பிறகு ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருப்பது நல்லது.
ஆண்கள் ஒருபோதும் குளிக்காமல் கோயிலுக்கு செல்ல வேண்டாம். அதுபோல், கோயிலில் நடந்து கொண்டே நெற்றியில் விபூதி வைக்கக் கூடாது.