உப்பில்லாத உணவு குப்பையில் சேரும் என்று சொல்வதினால் நாம் உண்ணும் உணவில் உப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம். உணவில் உப்பு இல்லையென்றால் அது வெஸ்டு தான். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி, பாற்கடலின் சங்கடத்திலிருந்து தோன்றினாள். லட்சுமி அவதரித்த அந்தக் கடலில் உப்பும் இருக்கிறது. எனவே லக்ஷ்மி தேவி உப்பில் வசிப்பதாக நம்பப்படுகிறது. உப்பு லட்சுமி தேவியின் அங்கம் என்று கூறப்படுகிறது.
எனவே, மாதத்தின் முதல் நாளில் உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் லட்சுமி தேவியின் வீட்டிற்குள் பணமழை பொழிவாள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவது நல்லது. இதன் அடிப்படையில் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமி தேவியாக வழிபடுகின்றனர். அதனால்தான் கிரகப் பிரவேசத்தின் போது புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லப்படுவது உப்புதான்.
லட்சுமியின் குணாதிசயமான உப்பை மாதத்தின் முதல் நாள் அல்லது முதல் வெள்ளிக்கிழமையில் வாங்கினால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்றும், நம் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, கல் உப்பை வாங்குவது நல்லது.
ஆகையால், மாத தொடக்கத்தில் உப்பு வழங்கினால் வீட்டில் வறுமை நீங்கி, பணவரவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் உப்பு வாங்கி வைத்தால் வருமானம் பெருகும். அதை போல் வெள்ளிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் 6:15 மணி வரையிலும், மதியம் ஒரு மணி முதல் 1:15 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 8:15 மணி வரையிலும் கடையில் உப்பு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். வாரந்தோறும் சிறிதளவு உப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். கல் உப்பு மகாலட்சுமியின் அங்கம் என்று கூறப்படுகிறது.
உப்பை கை தவறி கீழே கொட்டுவது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. எனவே, உப்பு தரையில் விழும்போது, அதை கால்களால் சுத்தம் செய்யாமல், ஈரமான துணியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதுபோல், கல் உப்பை மாதம் ஒருமுறை வீட்டின் மூலைகளில் வைக்கவும். பிறகு மாத இறுதியில் பழைய உப்பை நீக்கிவிட்டு, புதிய உப்பைச் சேர்க்கவும். இப்படி செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும். அமைதியும் ஓய்வும் கிடைக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். எனவே, வீட்டு சமையலறையில் உப்பு இல்லாமல் இருக்கவேகூடாது. உப்பு இருந்தால் மகாலட்சுமி அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.