மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 60 வயது, 80 வயது, 100 வயதை கடக்கும் தம்பதியர் தங்களது இணை மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு 60வது திருமணம், 80வது திருமணம், 100வது திருமணத்தை நடத்திக் கொள்வது வழக்கம்.