இப்போது உங்களுக்கு தெரிந்த முருகன் மந்திரங்கள் கூறி வழிபடுங்கள். அல்லது ஓம் சரவண பவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை உங்களால் முடிந்த அளவில் சொல்லிகே கொண்டே இருங்கள். இப்போது எப்போதும் போல் பூஜை அறையில் விளக்கேற்றி,தீப ,தூபங்கள் காட்டி முருகனை வழிபடுங்கள்.
இப்படி பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபீட்சம் உண்டாகும், சுப காரியங்கள் ஏற்படும், இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத் தடை இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், ஏதேனும் ஒரு வகையில் வீட்டில் சுபகாரியம் நிச்சயம் உண்டாகும்.
தவிர உங்களுக்கு தேவையான வரங்களையும்,வேண்டுதல்களையும் முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். இதனை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நீங்கள் கேட்ட,விருப்பமான அனைத்தும் விரைவில் நிறைவேறும்.
பங்குனி உத்திரம் நெய்வேத்தியம்-கந்தருக்கு பிடித்த கந்தரப்பத்தை படைத்து முருகனின் அருளாசி பெறுங்கள்!