மேஷம்:
இன்று பரபரப்பாக இயங்குவீர்கள். புதிய வேலையில் சேரவோ, புதிய தொழில் தொடங்கவோ ஏற்ற சமயம். எப்பேர்ப்பட்ட சூழலிலும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கவும். பணப்பிரச்னை ஏற்படும்.
ரிஷபம்:
கவலை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். எந்த வேலையிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டை பற்றியும் யோசித்து செயல்படவும். அலுவலகத்திலிருந்து எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காதீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய ஏற்ற சமயம். படித்து பார்க்காமல் எந்த ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டாம்.
மிதுனம்:
சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வரும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சகோதரர்களுடனான உறவை பாதுகாப்பது உங்களது பொறுப்பு. உத்யோகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்:
இன்று சில பிரச்னைகள் வரும். ஆனால் உங்கள் புத்திசாலித்தனத்தால் அவற்றையெல்லாம் சமாளித்துவிடுவீர்கள். பொருளாதார பிரச்னைகள் தீரும். மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். தொழிலில் ஊழியர்களால் பிரச்னை ஏற்படலாம். எனவே தொழிலில் கவனம் தேவை.
சிம்மம்:
அரசு ரீதியான வேலைகள் வெற்றிகரமாக முடியும். ஆன்மீக ஈடுபாட்டால் மன அமைதி நிலவும். எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். உங்கள் திட்டங்களை யாரிடமும் பகிராதீர்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்.
கன்னி:
வேலையை நிதானமாக தொடங்குங்கள். உங்கள் நெருங்கிய உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழிலில் சிறு பிரச்னைகள் ஏற்படும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
துலாம்:
சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். வேலை மற்றும் குடும்பத்தை பேலன்ஸ் செய்ய முடியாமல் தவிப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களே தடையை ஏற்படுத்துவார்கள். சொத்து வாங்குவதோ விற்பதோ வெற்றிகரமாக முடியும். அரசு ஊழியர்களை கையாள்வதில் கவனம் தேவை.
விருச்சிகம்:
உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாருடனும் பகிர வேண்டாம். நீங்கள் ரகசியமாக செய்யும் வேலை வெற்றி தரும். கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டு பராமரிப்பிற்காக லோன் வாங்குவீர்கள்.
தனுசு:
மோசமான சூழலால் மன அழுத்தம் ஏற்படும். ஆனால் பிராக்டிகலாக இருப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊழியரால் மன அழுத்தம் உண்டாகும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
மகரம்:
இன்றைய நாள் இனிமையாக தொடங்கும். அதீத செலவுகளால் பிரச்னையில் சிக்குவீர்கள். தொழில் வழக்கம்போல இருக்கும். மீடியா, ஆர்ட், அச்சுத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளை ஏற்று அவர்களது வழிகாட்டுதலின் படி செயல்படுவது நல்லது. உங்கள் வெற்றிகளை மற்றவர்களுடன் பகிராதீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்.
மீனம்:
உங்கள் அன்பிற்குரியவர்களிடம் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்வீர்கள். எந்த வேலையிலும் அவசரம் வேண்டாம். அனுபவமின்மையால் பிரச்னை ஏற்படும். கணவன் - மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்.