பல லட்சம் செலவழித்து வீடு கட்டி வாழ்ந்தாலும் சரி வாடகை வீட்டில் வசித்தாலும் சரி பணப் பிரச்சனை எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் தீராத கடன், வரவுக்கு மீறிய செலவு என பீடை பிடித்து ஆட்டுவதால் பலர் தூக்கமின்றி தவிக்கும் அவலமும் நடக்கிறது. இதற்கு சில வாஸ்து பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம்.
இது மாதிரியான வாஸ்து பிரச்சனைகளை வெறும் 10 ரூபாய் செலவில் தீர்த்துவிடலாம். ரொம்ப கடினமான விஷயம் கிடையாது. அப்புறம் மனம் நிம்மதி இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் மகிழ்ச்சி பொங்கி வழியும். வீட்டு வைத்தியம் தொடங்கி சலூன் வரை படிகாரத்தின் பயன்களை அறிந்திருப்பீர்கள். இதன் வாஸ்து பலன்கள் தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில் படிகாரம் பல பயன்களைக் கொண்டுள்ளது. வீடு அல்லது அலுவலகத்தில் வாஸ்து குறை இருப்பவர்கள் எளிதில் அதை நிவர்த்தி செய்ய இந்த ஒரு பரிகாரம் போதும். வாஸ்து குறைபாடு நீங்க, ஒரு 50 கிராம் படிகாரத்தை வாங்கி கொள்ளுங்கள்.