மாசி மாதம் பல ஆன்மீக சிறப்புகளை கொண்ட மாதம். அந்த வகையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மாசி மகம் தினத்தை மகாமகம் என்கிறோம். அன்றைய தினம் வானுலக தேவர்களும் கும்பகோணத்திற்கு வந்து அங்குள்ள மகா மகம் குளத்தில் வந்து நீராடுவார்கள் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் மரபு. இப்படி மகிமை வாய்ந்த கும்பகோணம் மகாமகம் குளத்தில் வருடாவருடம் வரும் மாசி மகத்தன்று நீராடினாலும் பலன் கிடைக்கும்.
அனைத்து நாளும் வழிபாட்டிற்கு ஏற்ற தினங்களாக வருவது மாசி மாதத்தில் தான். இந்த மாதத்தில் திதி, நட்சத்திரம், கிழமை உள்ளிட்ட எல்லாமே சிறப்பு வாய்ந்தது. சூரிய பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் மாசி மாதம், நாம் அதிகாலை எழுந்து இறைவனை நினைத்து புனித நீராடுவதும், பித்ரு தர்ப்பணம் செய்வதும் அதிசிறப்பு வாய்ந்தது.
மாசிமகம்..
மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பெளர்ணமியும் சேரும் தினத்தையே மாசி மகம் என்கிறாம். மாசிமகம் பல நன்மைகளை கொண்டுள்ளது. கும்பகோணம் மாகாமகம் குளத்தில் மாசி மகம் நாளில் நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
புனித நீராடல்
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி, சரயு, குமரி போன்றவை நவ நதிகள் என குறிப்பிட்டு புகழப்படுகின்றன. இங்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதால் ஆண்டு முழுக்க லட்சக்கணக்கானோர் சென்று நீராடி வருகின்றனர். இதனால் புண்ணிய நதிகளான இவற்றில் பாவங்கள் மொத்தமாக சேர்ந்தன. இதனால் கவலை கொண்ட நதிகள் சிவனிடம் முறையிட்டன. தங்களின் பாவங்களை நீக்க நதிகள் சிவனிடம் கெஞ்சியுள்ளன. அப்போது சிவன் சொன்னதுதான் 'மாசி மகம்' நாள் உருவாகவே காரணமானது. மக நட்சத்திரமும் பெளர்ணமியும் ஒன்றாக சேரும் மாசி மாதம் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்றாராம் சிவன்.
இப்படி தான் நவ நதிகளும் கும்பகோணம் நோக்கி சென்றன. மாசி மகத்தன்று மகாமகம் குளத்தில் நீராடி பாவங்களையும் போக்கின. அதே நாளில் தான் வருண பகவானின் தோஷம் நீக்கி சிவம் அருள் பாலித்தார்.
பித்ரு சாபம் நீங்கும்..
வரும் மார்ச் 6 ஆம் தேதி மாசி மகம் வருகிறது. அன்று வாய்ப்பு உள்ளவர்கள் கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு சென்றுவிடுவார்கள். அதிகாலையில் அங்கு புனித நீராடி, கோயிலுக்கு சென்று வழிபட்டால் இறைவனின் அருள் கிடைக்கும். கும்பகோணம் வரை செல்ல முடியாதவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆறு, கோயில் குளங்கள், கடல் ஆகியவற்றில் சென்று நீராடலாம். மாசி மகத்தன்று எல்லா நீர் நிலைகளிலும் புண்ணிய நதிகள் எழுந்தருள்வதாக பலகாலமாக நம்பப்பட்டு வருகிறது. அருகில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு நீராடினாலும் கும்பகோணம் குளத்தில் நீராடிய பலனை பெற்று கொள்ளலாம். குறிப்பாக அதிகாலையில் நீராடிய பின், அதே நீர் நிலையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் புண்ணியம்.
நீங்கள் திதி, அமாவாசை ஆகிய நாள்களில் தர்ப்பணம் கொடுப்பவர்களாக இருப்பினும் மாசி மகத்தன்றும் கண்டிப்பாக தர்ப்பணம் செய்யுங்கள். இதன் மூலம் விசேஷ பலன் கிடைக்கும். இதுவரை அமாவாசை அன்று விரதம் இருந்து திதி கொடுக்க தவறியதால் சேர்ந்த பாவம், தர்ப்பணம் அளிக்கும் போது அறிந்தும், அறியாமலும் செய்த பாவம் எல்லாமே தீரும்.
இதையும் படிங்க: மாசி மகம் எப்போது? மகிழ்ச்சி தரும் அதன் மகத்துவம்.. ஏழு ஜென்ம பாவம் போக்கும் விரதம்..!
வீட்டில் பலன் பெறுவது எப்படி?
வீட்டிற்கு அருகே ஆறு, குளம் ஆகிய நீர் நிலைகளில் நீராட எந்த வாய்ப்பும் இல்லாமல் போனவர்கள், அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மாசி மகம் பலனை அடைய எளிய முறை உள்ளது. வீட்டின் பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். பூஜைக்கு செய்யும் போது எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகம் செய்யக் கூடாது. செம்பு, பித்தளை ஆகியவற்றால் ஆன பாத்திரங்கள் அது இல்லையென்றால் மண்ணால் செய்த பாத்திரங்களால் தான் பூஜை செய்ய வேண்டும். தண்ணீர் எடுத்து கொண்ட பாத்திரத்தில் கொஞ்சம் மஞ்சள் பொடி, வாசனை தூள், கங்கை தீர்த்தம் (தீர்த்தம் இருந்தால் சேருங்கள் கட்டாயமில்லை) ஆகியவையும் கலந்து எடுத்து கொள்ளலாம்.
பிரார்த்தனை எப்படி செய்வது?
இந்த தண்ணீருக்கு தீபாராதனை, தூபாராதனை காட்டி, நவ நதிகளின் பெயரை உச்சரித்து பூஜிக்க வேண்டும். "இறைவனே எங்களுடைய இல்லத்தில் இந்த பாத்திரத்தில் உள்ள நீரில் எழுந்தருள்வாய். நாள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை நீக்கி, புனித நீராடிய பலனை எங்களுக்கு அருள வேண்டும்" என பிரார்த்தனை செய்து, அந்த நீரை கொஞ்சம் தலையில் தெளித்து கொள்ளுங்கள். சிறிது பருகலாம். இறைவனுக்கு பூஜித்த இந்த தண்ணீரை கொண்டு குளிக்கலாம். சாதாரண நீராக இருந்தாலும் பூஜை செய்த பிறகு தீர்த்த்திற்கு இணையாக மாறும். இந்த நீரை பயன்படுத்தி வீட்டில் குளிக்கும்போது புனித நீராடிய பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: கடன் பிரச்சனைகள் தீர உங்க கையால் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை போட்டாலே போதும்.. பணவரவு சில நாளில் உயரும்!