Today Rasipalan 2nd Mar 2023: ஒரு ஃபோன் உங்க வாழ்க்கையையே மாற்றப்போகுது..! நீங்க அதிர்ஷ்டசாலி தான் போங்க..!

Published : Mar 02, 2023, 05:30 AM IST

மார்ச் 2ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 2nd Mar 2023: ஒரு ஃபோன் உங்க வாழ்க்கையையே மாற்றப்போகுது..! நீங்க அதிர்ஷ்டசாலி தான் போங்க..!

மேஷம்:

ஆன்மீகத்தில் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் சிந்தனை புதுமையாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தனிப்பட்ட வேலைகளும் சுமூகமாக நடக்கும். உறவினர்கள் மோதலில் தலையிடாதீர்கள். தொழிலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும்.

212

ரிஷபம்:

மூத்தவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. முக்கியமான வேலைகள் சரியான நேரத்தில் முடியும். செல்ஃபோனில் நண்பருடன் பேசி பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாடகை ரீதியான விஷயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழிலில் சுமூகமான சூழல் இருக்காது. உடல்ரீதியாக சிறிய பிரச்னைகள் ஏற்படலாம். 
 

312

மிதுனம்:

உங்கள் குடும்ப விஷயங்களில் வெளியாட்களை தலையிட அனுமதிக்காதீர்கள். கோபப்படாமல் நிதானமாக பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலுங்கள். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் விஷயங்களிலும் கவனம் செலுத்துவார்கள்.  ஆரோக்கியம் மேம்படும்.
 

412

கடகம்:

குழந்தைகள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். பழைய கருத்து வேறுபாடுகளும் இன்று முடிவுக்கு வரும். விடாமுயற்சியுடனும் துணிச்சலுடனும் நீங்கள் செய்யும் செயல் வெற்றியை தரும். முக்கியமான விஷயங்களை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். கணவன் - மனைவிக்குள் ஈகோ வேண்டாம்.

வாஸ்துபடி உங்க வீட்டு வாசல் எப்படி இருக்க வேண்டும்.. எத்தனை வாசல் இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் நிலைக்கும்

512

சிம்மம்:

நீங்கள் சுய ஆய்வு செய்ய வேண்டிய நேரம். உங்கள் திறமை மற்றும் அறிவின் மூலம் வேலையில் அருமையான முடிவுகளை பெறுவீர்கள். எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் சரியான தீர்வை காண்பீர்கள். பொருளாதாரம் மந்தமாகவே இருக்கும். கணவன் - மனைவி இடையே பரஸ்பர புரிதல் இருக்கும்.
 

612

கன்னி:

கடின உழைப்பு உங்கள் இலட்சியத்தை அடைய உதவும். இந்த நாள் உங்களுக்கு பதற்றமாகவே தொடங்கும். முதலீடு செய்வதில் அவசரம் காட்டாதீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். அது உங்கள் மதிப்பை கெடுக்கும். தொழிலில் சிறு பிரச்னைகள் ஏற்படலாம். சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
 

712

துலாம்:

உங்களுக்கு இன்றைய தினம் ஃபோன் மூலம் முக்கியமான செய்தி வந்துசேரும். மன நிம்மதி அடைவீர்கள். வெளிவேலையில் அதிக நேரத்தை வீணடிக்காதீர்கள். உணர்ச்சிமயமாக இல்லாமல் கொஞ்சம் நடைமுறை சாத்தியத்தை புரிந்து செயல்படுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

812

விருச்சிகம்:

வீட்டு பராமரிப்பில் நேரம் செலவழிப்பீர்கள். அதேவேளையில், பொருளாதாரத்திலும் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களை நம்புவதைவிட, உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். கவனக்குறைவாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.  கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பு.
 

912

தனுசு:

ஃபோன் அல்லது ஈமெயில் மூலமாக உங்களுக்கு பலன் தரக்கூடிய முக்கியமான செய்திகள் வரும். உறவினர்களுடனான கருத்து மோதல் முடிவுக்கு வரும். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து தெளிவாக செயல்படுங்கள். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். தொழிலில் கவனம் செலுத்தவும். 
 

அஷ்டமி அ‌ன்று வீட்டில் நல்ல காரியம் தவிர்ப்பதற்கு காரணம் இதுதான்.. மீறினால் அஷ்டலட்சுமிகள் அருளை இழப்பீர்கள்! 

1012

மகரம்:

அரசியல் அல்லது சமூகத்தில் பெரிய மனிதரிடமிருந்து முக்கியமான தகவல் வரும். இளைஞர்களுக்கு வெற்றியை தரும் நாள். சகோதரர்களுக்கு இடையேயான பிரச்னைகளை அமைதியாக பேசி முடிக்கவும். வீண் பேச்சை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 

1112

கும்பம்:

குடும்பத்தினருடன் அமர்ந்து பேசினால், பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதிய விஷயத்தை தெரிந்துகொள்வீர்கள். தவிர்க்க முடியாத திடீர் செலவுகள் வரும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் மன அமைதியுடன் இருங்கள். தொழிலுக்கு சாதகமான நாள். ஆனால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.
 

1212

மீனம்:

சேவை செய்வதன் மூலம் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். பழைய நண்பருடன் பேசி மகிழ்வீர்கள். எதிர்காலத்தை நினைத்து இளைஞர்களுக்கு பயம் ஏற்படும். வாக்குவாதங்கள், சர்ச்சைகளை தவிர்க்கவும். தொழிலில் உறவினர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். 
 

Read more Photos on
click me!

Recommended Stories