உங்க நாக்கின் வடிவம் நிறம் இப்படி இருந்தால் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. சாமுந்திரிகா லட்சணம் சொல்வது என்ன?

First Published | Mar 2, 2023, 11:36 AM IST

நாக்கின் வடிவம், நிறம் ஆகியவை வைத்தும் பலன் கூற முடியுமாம். 

ஒருவருக்கு ஜோதிட சாஸ்திரம் அடிப்படையில் பலன்களை சொல்வதை போலவே நாக்கின் வடிவம், நிறத்தை கொண்டே பலன் சொல்ல முடியுமாம். ஒருவருடைய உடலமைப்பு எப்படி இருக்கிறதோ அதை வைத்தே பலன் சொல்வதை சாமுந்திரிகா லட்சண பலன் என்பார்கள். அந்த வகையில் நாக்கின் வடிவம், நிறம் வைத்து குணம், தொழில், அதிர்ஷ்டம், ஆரோக்கியம் ஆகிய பல பலன்களை காணலாம். 

பவிஷ்ய புராணத்தின் அடிப்படையில் பார்த்தால் யாருக்கு நாக்கு சிவப்பு நிறமாகவும், மெல்லியதாக அல்லது அதிகமான அடர்த்தி உடையதாக இருக்கிறதோ அவர்கள் வாழ்க்கையின் எத்துறையிலும் சிறந்து விளங்குவார்களாம். எளிதில் வெற்றி பெறும் ஆற்றலும் இருக்குமாம். இவர்கள் வேலையில் சிறப்பாக இருப்பதோடு உயர் பதவிகளை கூட அடைவார்களாம். ஆரோக்கியமும் மேம்பட்டு காணப்படும்.

Tap to resize

நன்கு தடித்த நாக்கு உடையவர்களின் பேச்சு கொஞ்சம் கடுமையாக இருக்குமாம். ஆனால் மனதில் கெட்ட என்ணமெல்லாம் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் பேசுவதை மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள். இந்த நபர்கள் பேச்சை கட்டுப்படுத்தினால் நலம் வாழலாம். பேச்சை கட்டுப்படுத்தி எப்போதும் சிந்தித்து பேசினால் நல்லது. 

உங்களுடைய நாக்கின் வண்ணம் கொஞ்சம் மஞ்சள் பூசியது மாதிரி இருந்தால் அது மங்களகரமானது இல்லை. மஞ்சள் நாக்கு உங்களுடைய ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. இவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படலாம். இவர்களுக்கு விஷயங்களை பகுத்தறியும் ஆற்றலும் குறைவுதான். ஆரோக்கியத்தில் கவனம் கொள்வதும், யோகா தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதும் நல்லது.  

கரு நாக்கு..

சாமுத்ரிகா லட்சணத்தின்படி, எவரின் நாக்கி கருப்பாகவோ, கரும்புள்ளிகள் அதிகம் கொண்டதாகவோ உள்ளதோ அவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சிரமங்கள் அதிகம் இருக்கும். அவர்கள் ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரே இடத்தில் ரொம்ப காலம் வேலை செய்யமாட்டார்களாம். அதில் அவர்களுக்கு சிக்கல்கள் வரும். எந்த தொழில் செய்தால் அடிக்கடி மாற்றுவார்கள். தொழில் குறித்த நிச்சயமற்ற நிலை இவர்களின் வாழ்வில் தொடர்கதை. மாறாது. 

இதையும் படிங்க: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங்.. வெறும் 5 நிமிடம் செய்வதால் இவ்ளோ நன்மை இருக்கா?

இரட்டை நாக்கு..

நாக்கின் நிறம் எப்போதும் ஒரே போல இல்லாமல் இருக்கும் நபர்கள், வெவ்வேறு நிறங்களில் நாக்கு இருந்தால் அத்தகையர்களின் பேச்சு ரொம்ப ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் சீக்கிரமாகவே கெட்ட சகவாசத்திற்கு அடிமையாகிவிடவும் வாய்ப்புள்ளது. ரொம்ப விதி மீறலில் ஈடுபடலாம். குறிப்பாக ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. 

நாக்கில் மச்சம்..!

நாக்கில் மச்சம் இருந்தால் ரொம்பவும் அதிர்ஷ்டம். இவர்களுக்கு வசீகரமான பேச்சு உண்டு. அரசியல் துறையில் நல்ல முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். ராஜதந்திரம் தெரிந்தவர்கள். சமயங்களில் இவர்களுக்கு சுயமதிப்பு குறைவாக காணப்படும். அவசரமான செயல்களால் பிரச்சனைகளை இவர்களே இழுத்து தலையில் போட்டு கொள்வார்கள். 

இதையும் படிங்க: மாசி மகம் நாளில் வீட்டிலேயே புனித நீராடி முழுபலனை அடைவது எப்படி ?

Latest Videos

click me!