
நவராத்திரி இந்துக்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தியாவில் இந்த பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஒன்பது நாட்களில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது துர்கா தேவியின் 9 வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, சுஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகெளரி, சித்திதாதிரி ஆகியவற்றை ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளிலும் பூஜை செய்து வழிபடுவார்கள்.
நவராத்திரியின் நிறைவு நாளில் விஜயதசமி கொண்டாடப்படுவது வழக்கம். இதே நாளில் தான் தசரா பண்டிகையும் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று 2024 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று சரஸ்வதி மற்றும் விஜயதசமி பண்டிகையுடன் நிறைவடைகிறது.
நவராத்திரி நாளில் விரதம் இருந்து பூஜை செய்து துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும் முழு மனதுடன் வழிபட்டால் அனைத்து துன்பங்களையும் போக்கி எல்லா விதமான நலன்களையும் தேவி அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
இந்த பண்டிகை நாளில் மிகவும் விசேஷமானது என்னவென்றால், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கடவுளுடன் தொடர்புடையது போலவே, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வண்ண ஆடையை அணிந்து வழிபட்டால் அந்த வழிபாட்டிற்கான முழு பலன்களையும் பெறுவீர்கள் என்பது ஐதீகம். ஏனெனில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் உள்ளது. எனவே, இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் எந்தெந்த நாளில் என்னென்ன நிறத்தில் ஆடையை அணிய வேண்டும் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து இங்கு விரிவாக நாம் பார்க்கலாம்.
நவராத்திரி வண்ணங்கள் :
1. சைலபுத்ரி - சிவப்பு
நவராத்திரியின் முதல் நாள் சைலபுத்ரி புத்தரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சக்தி மற்றும் உறுதியை குறிக்கிறது.
2. பிரம்மச்சாரணி - ராயல் ப்ளூ
நவராத்திரியின் இரண்டாவது நாள் பிரம்மச்சாரணி தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ராயல் ப்ளூ நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனில் இந்நிறம் அமைதியை பிரதிபலிக்கிறது. இது அவளுடன் தொடர்புடையது.
3. சந்திரகாண்டா - மஞ்சள்
நவராத்திரியின் மூன்றாவது நாள் சந்திரகாண்டா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது. இது அவளுடன் தொடர்புடையது.
4. சுஷ்மாண்டா - பச்சை
நவராத்திரியின் நான்காவது நாளில் பக்தர்கள் சுஷ்மாண்டா தேவிக்கு விருப்பமான பச்சை நிற ஆடையை அணிய வேண்டும். இதனால் அவள் தனது பக்தர்களுக்கு அனைத்து விதமான செழிப்பை வழங்குவாள்.
5. ஸ்கந்தமாதா - சாம்பல்
நவராத்திரியின் ஐந்தாம் நாள் பக்தர்கள் ஸ்கந்தமாதாவின் விருப்பமான சாம்பல் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சமநிலை மற்றும் நிலத்தன்மையை குறிக்கிறது. இது
அவளுடன் தொடர்புடையது.
6. காத்யாயினி - ஆரஞ்சு
வலிமை மற்றும் தைரியத்தின் உருவமான காத்யாயினி தேவிக்கு நவராத்திரியின் ஆறாவது நாளில் ஆரஞ்சு நிற ஆடைய அணிந்து வழி பட வேண்டும். ஏனெனில், இந்நிறம் துடிப்பான மற்றும் சுறுசுறுப்பான நிறமாகும். இது அவளுடைய கடுமையான ஆளுமையை பிரதிபலிக்கிறது.
7. காளராத்திரி - வெள்ளை
துர்கா தேவியின் கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த வடிவமான காலராத்திரி என்பதால் நவராத்திரி ஏழாவது நாளில் பக்தர்கள் வெள்ளை நிற ஆடையை அணிந்து அவளை வழிபட வேண்டும். இந்நிறந் தூய்மை மற்றும் ஆன்மீகத்தை குறிக்கிறது. இது அவளுடன் தொடர்புடையது.
இதையும் படிங்க: நவராத்திரி விரதத்தின் போது டீ அல்லது காபி குடிக்கலாமா?
8. மகாகெளரி - இளஞ்சிவப்பு
அழகு மற்றும் கருணையின் உருவமாக மகாகெளரி தேவி கருதப்படுவதால் நவராத்திரியின் எட்டாவது நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து அவளை வழிபட வேண்டும். ஏனெனில் இந்நிறம் அன்பையும், இரக்கத்தையும் குறிக்கிறது. இது அவளுடைய தெய்வீக ஆற்றலையும் குறிக்கிறது.
9. சித்திதாத்ரி - ஸ்கை ப்ளூ
நவராத்திரியின் கடைசி நாளில் ஞானத்தையும் அறிவையும் அருளும் சித்திதாத்ரி தேவியை வணங்குவதால் அவளுக்கு உகந்த வான நிறத்தில் ஆடையை பக்தர்கள் அணிந்து அவளை வழிபட வேண்டும். இந்நிறம் பரந்த தன்மையையும், ஆன்மீகத்தையும் குறிக்கிறது மற்றும் இந்நிறம் அவளுடன் தொடர்புடையது.
இதையும் படிங்க: நவராத்திரி 2024 : தேதி.. சிறப்புகள் மற்றும் பல..