Thiruchendur Murugan Temple
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம், 2வது படை வீடு திருச்செந்தூர், 3வது படை வீடு பழநி, 4வது படை வீடு சுவாமிமலை, 5வது படை வீடு திருத்தணி, 6வது படை வீடு பழமுதிர்சோலை ஆகியவைகள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் பல்வேறு விழாக்கள் கொண்டாப்படுகிறது.
Kandha Sasti Festival
இந்நிலையில், இத்திருவிழாக்களில் முக்கிய திருவிழாவாக பார்க்கப்படக்கூடியது கந்த சஷ்டி திருவிழா. சூரனை வதம் செய்த சுப்ரமணியர் அருள்பாலிக்கும் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 6 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள்வார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் மாதம் 2ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது.
Thiruchendur Murugan Kandha Sasti Festival
தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நவம்பர் 7ம் தேதி மாலை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில், 6 நாட்களும் கோவிலில் தங்கி முருகனை தரிசனம் செய்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பின் படி கோவிலில் அமலில் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டும் தான் அமலில் இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 3ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை கூறலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Undiyal collection
இதனிடையே, திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வந்தது. இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம் 2 கிலோ 352 கிராமும், வெள்ளி 41 கிலோ 998 கிராமும், 1,589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும் கோவில் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 860 ரூபாயும், கோசாலை பராமரிப்புக்காக 82 ஆயிரத்து 722 ரூபாயும் வருமானமாக கிடைத்துள்ளது.