
இந்தியாவில் இந்து மத மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்நாளில் கோவில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் கொலு அமைத்து அம்மனை முழுமனதுடன் வழிபடுவார்கள்.
9 நாள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, லட்சுமி சரஸ்வதி என துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் முடிவாக பத்தாவது நாளில் தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த 2024 ஆம் ஆண்டு நவராத்திரி எப்போது வருகிறது? அதன் சிறப்புகள் என்ன என்பதை குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: நவராத்திரி விரதத்தின் போது டீ அல்லது காபி குடிக்கலாமா?
நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி பண்டிகை வருடத்திற்கு நான்கு முறை வருகிறது. ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகை தான் இந்தியாவின் பல இடங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் நுழையும் மற்றும் அம்பாளின் பலவிதமான வடிவங்களை போற்றி வழிபடும் காலம் ஆகும். இதனால் தான் இதை மகா நவராத்திரி என்றும் சொல்லுவார்கள்.
நவராத்திரி 2024 எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி ஆனது மகாளய அமாவாசைக்கு அடுத்து பத்து நாட்களில் கொண்டாடப்படும். அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இதற்கு அடுத்த நாளான அதாவது, அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை வரை நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை வருகிறது.
நவராத்திரி வரலாறு மற்றும் முக்கியத்துவம் :
இந்து புராணங்கள் படி, இந்த காலகட்டத்தில் தான் துர்கா தேவி தனது ஒன்பது வடிவங்களில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் இந்த பண்டிகை ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாளில், ஒவ்வொரு நாளிலும் துர்க்கையின் ஒவ்வொரு வடிவங்களையும் வழிபடுவது வழக்கம். ஒவ்வொன்றும் பெண் சக்தியின் வடிவத்தை குறிக்கிறது. மகிஷன் என்ற அரக்கனை துர்கா தேவி வதம் செய்து வெற்றி பெற்றதை நினைவுக் கூறி கொண்டாடும் நாள் இந்த திருநாளாகும். இது தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியை குறிக்கும் நாள் ஆகும். இந்த நாளை தான் வட மாநிலங்களில் தசராவாக கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க: நவராத்திரிக்குப் பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்வது? தவறுதலாக கூட இதைச் செய்யாதீர்கள்..!
நவராத்திரி பண்டிகையின் கொண்டாடுவது ஏன்?
நவராத்திரி என்பது இந்து மதத்தினரின் முக்கியமான விரல் மற்றும் பண்டிகைகளில் ஒன்றாகும். மேலும் பெண்மையையும், பெண் தெய்வத்தின் சக்தியையும், அவளது பல்வேறு வடிவங்களையும் போற்றி வழிபடும் நாளாகும். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால், நம்முள் இருக்கும் பகை, எதிர்மறை ஆற்றல்கள் மோசமான எண்ணங்கள் போன்றவற்றை அளித்து, நம்முடைய வாழ்க்கையை செழிப்பாக மாற்றி நம்மை வாழ வைப்பாள் என்பது நம்பிக்கை.
நவராத்திரி சிறப்புகள் :
கொலு வைப்பது நவராத்திரியின் சிறப்பு அம்சமாகும். கொலு என்பது துர்க்கையின் பல்வேறு வடிவங்களை பொம்மைகளாக செய்து, நேர்த்தியாக அலங்கரித்து மேடையில் வைத்து, அவற்றை அம்பாளாக நினைத்து அவற்றிற்கு பூஜை மற்றும் சகல வழிபாட்டு முறைகளையும் செய்து வழிபடுவார்கள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் அவற்றின் முன் நவகிரக கோலம் போட்டாள், அம்பாளின் அருள் மற்றும் நவகிரக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.