உங்க கையில் பணம் சேர! இந்த 7 பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்! அதிர்ஷ்டம் தேடி வரும்..

First Published | Apr 5, 2023, 7:25 PM IST

வாஸ்துசாஸ்திரத்தின்படி, உங்களிடம் குறையாமல் பணம் சேர இந்த 7 பொருள்களை வீட்டில் வைக்க வேண்டும். 

ways to attract money in tamil: பணம் சேர்க்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நோக்கம். ஏனென்றால் வாழ்வதற்கு பணம் முக்கியமாக இருக்கிறது. வாழவும் சாகவும் பணம் அத்தியாவசியமாக இருக்கிறது. வாஸ்துபடி வீட்டில் எந்தெந்த பொருள்களை வைத்தால் பணம் சேரும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

பெயர் பலகை! 

வீட்டுக்கு வெளியே பெயர் பலகை வைக்கலாம். இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை தரும். நல்ல வாய்ப்புகளை ஈர்க்கும். 

உப்பு 

இந்து சாஸ்திரத்தின்படி, உப்பு குறிப்பிட்ட பலன்களை கொண்டது. வீட்டின் மூலைகளில் உப்பு கிண்ணத்தை வைப்பது அனைத்து எதிர்மறைகளையும் விரட்டி விடும். 

Tap to resize

பூந்தொட்டி! 

தாவரங்கள், மலர்கள் உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும். மூங்கில், துளசி, தாமரை, மல்லிகை உள்ளிட்ட பல தாவரங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இவை வீட்டில் செழிப்பை ஈர்க்கின்றன. வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் பச்சை அல்லது நீல நிற மலர் தொட்டியும், தென்மேற்கு மூலையில் மஞ்சள் நிற மலர் தொட்டியும் வைக்கலாம்.  

கண்ணாடி! 

நீங்கள் தொழிலில் முன்னேற்றம் கன விரும்பினால் அலுவலகத்திலும் வீட்டு ஹாலிலும் கண்ணாடியை வையுங்கள். இதை வடக்கு அல்லது மேற்கு திசையில் வைக்கலாம். 

தீபம் 

தினமும் காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்குகள், தீபங்கள், தூபங்கள் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்காது. கண் திருஷ்டி விலகும். புகழ், வெற்றி கிடைக்க தென்கிழக்கில் சிவப்பு விளக்கு வைக்க வேண்டும். 

இதையும் படிங்க: பணக்கஷ்டம், உடல் ஆரோக்கியம் போன்ற வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் 1 எளிய பரிகாரம்!

மீன் தொட்டி! 

வடமேற்கு திசையில் ஒரு சிறிய நீர் நீரூற்று வைக்கலாம். மீன் தொட்டியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்தால் மிகவும் மங்களகரமானது. இது நேர்மறை ஆற்றல், செல்வம், செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறது. அதே நேரம் தண்ணீர் தேங்கி அழுக்காகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; வீட்டில் தேங்கி நிற்கும் கழிவு நீர் நிதி வளர்ச்சிக்கும் வாய்ப்புகளுக்கும் தடைகளை ஏற்படுத்தும் என்பதால், அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 

பண கிண்ணம் 

வீட்டில் செழிப்பை ஈர்க்க, ஒரு செயற்கை கிண்ணத்தில் பணத்தை வைத்திருக்கலாம். இதனால் மிக விரைவில் நல்ல விஷயங்களை பெறுவீர்கள். இது நிதி வருமானத்தையும் செழிப்பையும் ஈர்க்கிறது. ஜெம்ஸ் ஸ்டோன் மரத்தையும் வைக்கலாம். 

இதையும் படிங்க: ஏப்ரலில் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம்! சூரியன், புதன் கூட்டணியால், செல்வம் குவிய போகுது!!

Latest Videos

click me!