ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இருப்பினும் கிரகங்களின் இளவரசனாக விளங்கும் புதன் பகவான் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவர் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் பொறுப்பான கிரகமாக விளங்குகிறார். இவரின் ராசி மாற்றம் என்பது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி அவர் துலாம் ராசியில் இருந்து வெளியேறி, விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர்.