Published : Apr 16, 2025, 01:50 PM ISTUpdated : Apr 16, 2025, 02:03 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் எப்போது, எப்படி முன்பதிவு செய்ய வேண்டும், கட்டண விபரங்கள், தரிசன நேரம் போன்ற முக்கிய தகவல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Thirukalyanam: 2025 Ticket Booking Full Details : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மே 6ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ஆம் தேதியும், மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் மே 9ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
26
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2025:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2025 மே 8ஆம் தேதி வியாழன் கிழமை அன்று வடகாடு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:30 மணி முதல் 8:51 மணிக்குள் நடைபெறும். இந்த திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ஆன்லைன் கட்டணம் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியாகியுள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்க்க விரும்பும் பக்தர்களுக்காக இரண்டு விதமான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான டிக்கெட் உள்ள பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாக திருக்கல்யாணத்தை பார்க்க திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாதவர்களோ தெற்கு கோபுரம் வழியாக அதுவும் இட வசதிக்கு ஏற்ப தான் அனுமதிக்கப்படுவார்கள்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்க்க https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 2ம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அதுவும் இரவு 9 மணி வரை மட்டுமே கட்டண சீட்டு முன்பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
56
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025
ஒருவர் எத்தனை டிக்கெட் புக் செய்யலாம்?
ரூபாய் 500 டிக்கெட்டை ஒருவர் இரண்டு வரை புக் செய்யலாம். அதுபோல ரூபாய் 200 டிக்கெட்டை ஒருவர் 3 வரை புக் செய்யலாம். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ. 200 டிக்கெட்டை பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மொபைல் நம்பர், ஆதார் கார்டு போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியவில்லை என்றால், சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் நேரடியாக சென்று டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பும் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
66
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025
பக்தர்களுக்காக...
திருக்கல்யாண நாள் அதாவது மே 8ம் தேதி காலை 8:30 மணி முதல் 8:53 மணிக்குள் நடைபெறும். எனவே டிக்கெட் உள்ளவர்கள் அன்று காலை 5 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூபாய் 500 டிக்கெட் பெற்றவர்கள் கோயிலின் வடக்கு முனீஸ்வர் சன்னதி வழியிலும், ரூபாய் 200 டிக்கெட் பெற்றவர்கள் கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு சித்திரை வீதி வழியாக தான் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாதவர்கள் காலை 7:00 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அமர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ரொம்பவே முக்கியமான நிகழ்வு என்பதால் இந்த திருமணத்திற்கான நிறைய பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.