சங்கடஹர சதுர்த்தி 2025: விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தி நாளில் பக்தர்கள் சிலர் சூரியன் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பார்கள் இன்னும் சிலரோ முழு நாளும் விரதம் இருப்பார்கள் மேலும் சிலர் பலன்கள் பால் மற்றும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். விரதம் இருப்பவர்கள் விநாயகருக்கு காலையிலே பூஜை செய்து, விநாயகர் படத்தை அலங்கரித்து, விநாயகர் பிடித்த பழங்கள், அருகம்புல், மோதகம், தேங்காய், அர்ச்சதை வைத்து வழிபட வேண்டும். முக்கியமாக, "ஓம் கணபதி போற்றி" இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் 108 முறை சொல்லியபடியே மனதில் உங்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்று நம்புங்கள். பிறகு மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அங்கே நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு, அர்ச்சனை செய்து வழிபட்டு பிறகு, இரவில் உதயமாகும் சந்திரனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.