காலபைரவருக்கு உகந்த வளர்பிறை அஷ்டமி நாளில், சொர்ண ஆகர்ஷண பைரவரை குறிப்பிட்ட மந்திரம் கூறி வழிபடுவதால் அஷ்டலட்சுமிகளின் அருள் கிட்டும். இந்த வழிபாடு சனீஸ்வரனின் தாக்கத்தைக் குறைத்து கோடீஸ்வர யோகத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாகவும், சனீஸ்வர பகவானின் குருவாகவும் திகழ்பவர் காலபைரவர். இவர் காவல் காக்கும் கடவுளாக கருதப்படுகிறார். காலபைரவருக்கு மிகுந்த பிரியமான திதி அஷ்டமி ஆகும். தேய்பிறை அஷ்டமியில் அவரை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். வளர்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அஷ்டலட்சுமிகளின் அருளால் செல்வ செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது.
24
வளர்பிறை அஷ்டமி வழிபாடு
அக்டோபர் 29 ஆம் தேதி புதன்கிழமை வளர்பிறை அஷ்டமி நாளாக வருகிறது. அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் இந்த சிறப்பு வழிபாட்டை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் பைரவரின் படம் இருந்தால் முன் வைத்து, இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு தட்டில் இரண்டு வெற்றிலை, மூன்று பாக்கு, 11 நாணயங்களை வைத்து, முன்பாக நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வடக்கு திசை நோக்கி அமர்ந்து “ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ” எனும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
34
பொன் பொருள் குவிக்கும் வழிபாடு
பிறகு கற்பூர தீபம், தூபம் (பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, ஏலக்காய் சேர்த்து) காட்டி ஆராதனை செய்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெற்றிலை, பாக்கு, நாணயம் ஆகியவை அந்த இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு அந்த நாணயங்களை பணம் வைக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், சனீஸ்வரனின் தாக்கம் குறையும். நவகிரகங்களின் தீய விளைவுகள் நீங்கும். அதோடு அஷ்டலட்சுமிகளின் அருளும் சேர்ந்து, கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.