பம்பையிலிருந்து பக்தர்கள் மதியம் முதல் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று ஆன்லைன் மூலம் முப்பதாயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு கேரள அரசு முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதாவது நீர் நிலைகளில் வாழும் அமீபாவால் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் பரவி வருகிறது. ஆகவே சபமரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்
அப்படி ஆறு, குளங்களில் குளித்தால் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடி குளிக்க வேண்டும் என அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மூளையை தின்னும் அமீபா நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துவதால் மூக்கு மற்றும் வாய் மூடி குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக சுத்தம் செய்து முகம், கை, கால்கள் துடைக்க பயன்படுத்த வேண்டும்.