மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள திருமணஞ்சேரி உத்வகநாதர் கோவில், திருமணத் தடைகள் நீங்கும் பரிகார ஸ்தலமாக தமிழகத்தில் பெரும் நம்பிக்கையுடன் தரிசிக்கப்படும் தலம். பழங்காலத்தில் ‘கோவில்காடு’ என அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப்போக்கில் ‘திருமணஞ்சேரி’ என்று பெயர் பெற்றது. இங்கு சிவபெருமான் கந்தபரிமலேஸ்வரராகவும், அம்பாள் பெரியநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர்.
இந்தத் தலத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்து நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, சுயம்பு விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி–தேவசேனா சமேத சுப்பிரமணியர், துர்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, சூரியன் உள்ளிட்ட பல தெய்வங்களையும் தரிசிக்கலாம்.