
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முழங்கும் அந்தத் திருநாள் நெருங்கிவிட்டது. முருகப்பெருமானின் திருவருளைப் பெறவும், மனக்கவலைகள் நீங்கி வாழ்வில் நம்பிக்கையுடன் முன்னேறவும், வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கவும் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புனித விரதமே கந்த சஷ்டி விரதம்.
ஆறுபடை வீடுகளிலும் முருகன் ஆலயங்களிலும் பக்தி முழக்கம் ஒலிக்க, வேலவனின் திருநாமம் எங்கும் எதிரொலிக்க, ஆறாம் நாள் நடைபெறும் சூரசம்ஹாரத்தைத் தரிசிப்பது பக்தர்களுக்கு மிகுந்த ஆன்மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.
முருகப்பெருமான் சூரபத்மனை வென்று தர்மத்தை நிலைநாட்டியதை நினைவுகூரும் இந்த விழாவில், பலரும் ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தனைக் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில், 2026- ஆம் ஆண்டு கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? சூரசம்ஹாரம் எந்த நாளில் நடைபெறுகிறது? விரதம் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்? விரதத்தை எப்படித் தொடங்கி, எப்போது நிறைவு செய்ய வேண்டும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
சஷ்டி
வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் ஆறாவது திதி 'சஷ்டி' என்று அழைக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு இரண்டு முறை (வளர்பிறை சஷ்டி மற்றும் தேய்பிறை சஷ்டி) சஷ்டி திதி வரும். சஷ்டி திதி என்பது பெரும்பாலும் முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
கந்த சஷ்டி விரதம் முக்கிய தேதிகள்
சஷ்டி விரதம் தொடக்கம் - நவம்பர் 10, செவ்வாய்க்கிழமை
சூரசம்ஹாரம் - நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை
முருகன் திருக்கல்யாணம் - நவம்பர் 16,திங்கட்கிழமை
ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி, சஷ்டி திதி அன்று நிறைவடையும் ஆறு நாள் விரதமே கந்த சஷ்டி விரதம். ஆறு நாட்களில் சூரசம்ஹாரமும், ஏழாம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.
புராண மரபின்படி, தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மன் என்ற அசுரனை எதிர்த்து முருகப்பெருமான் ஆறு நாட்கள் போரிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகிறது.
தீமையை வென்று நன்மை நிலைநாட்டப்படுவதன் அடையாளமாக இந்த விழா பக்தர்களால் போற்றப்படுகிறது. குறிப்பாகத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழா மிகவும் புகழ்பெற்றது.
கந்த சஷ்டி விரதம் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
கந்த சஷ்டி விரதத்தைப் பக்தர்கள் தங்கள் குடும்ப வழக்கம், உடல்நிலை, வேண்டுதல் ஆகியவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு கால அளவுகளில் கடைப்பிடிக்கிறார்கள்.
விரத முறை மற்றும் விரதம் தொடங்கும் நாள்
48 நாட்கள் மண்டல விரதம் - செப்டம்பர் 29
21 நாட்கள் விரதம் - அக்டோபர் 26
11 நாட்கள் விரதம் - நவம்பர் 5
6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் - நவம்பர் 10
ஒரு நாள் விரதம் - நவம்பர் 15
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அனைவரும் ஆறு நாட்களும் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
குறிப்பு : விரதம் இருப்பதால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், மருந்துகளை உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் நீண்ட நேரம் உணவு தவிர்ப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகளைக் கடுமையான உபவாசம் இருக்கச் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தின் ஆன்மிகச் சிறப்புகள்
விரதம் நிறைவு செய்யும் நாள்
சூரசம்ஹாரத்தின் மறுநாளான சப்தமி திதியில், முருகப்பெருமானுக்கும் தெய்வானை அம்மைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சூரபத்மனை வதம் செய்து வெற்றி பெற்ற முருகப்பெருமானுக்கு நடைபெறும் இந்த மங்கல நிகழ்வு, கந்த சஷ்டி விழாவின் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய பிறகு, மகிழ்ச்சியும் மங்கலமும் நிறைந்த புதிய அத்தியாயம் தொடங்குவதன் அடையாளமாக இந்தத் திருக்கல்யாணம் போற்றப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் தங்கள் குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபின்படி விரதத்தை நிறைவு செய்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
குறிப்பு : இவை ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படும் பலன்கள். விரதம் இருப்பதால் குறிப்பிட்ட பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு அறிவியல் உறுதி இல்லை.