தலையணைக்கு அடியில் 1 இலை (நல்ல தூக்கம் & வழிகாட்டுதல்)
தினமும் ராத்திரி தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் 1 பிரியாணி இலையை வைத்துவிட்டு தூங்குங்கள். இது மனசில் இருக்கிற கவலையைப் போக்கி நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்ற மாதிரி கனவுகள் மூலமாக சில அறிகுறிகள் கிடைக்கும்.
கணவன்-மனைவி பிரச்சனைக்கு 2 இலைகள் (அன்யோன்யம் வளர)
கணவன்-மனைவி அல்லது காதலர்கள் நடுவுல அன்பு அதிகரிக்க 2 பிரியாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு இலையில் உங்கள் பெயரையும், இன்னொரு இலையில் உங்கள் பார்ட்னர் பெயரையும் எழுதுங்கள். உங்கள் பார்ட்னர் பெயர் எழுதிய இலையை உங்கள் தலையணைக்கு அடியிலும், உங்கள் பெயர் எழுதிய இலையை அவர்கள் தலையணைக்கு அடியிலும் வையுங்கள். இதனால் உறவில் அன்பும் நம்பிக்கையும் அதிகமாகும்.
லாக்கரில் 3 இலைகள் (பண வரவு மற்றும் பொருளாதார வளர்ச்சி)
பணக்கஷ்டம் தீர 3 பிரியாணி இலைகளை ஒண்ணா சேர்த்து பச்சை நிற நூலால கட்டுங்கள். இதை உங்கள் லாக்கர், பீரோ அல்லது கேஷ் பாக்ஸில் வையுங்கள். இது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகமாக்கி, வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.