Horoscope Today- Indriya Rasipalan November 26th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (26/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சில நாட்களாக இருந்து வந்த டென்ஷன் நீங்கும். வீட்டு வசதிகள் தொடர்பான தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அதிக வேலைப்பளு இருந்தாலும் ஓய்வெடுக்க முடியாது. சில மனக்கவலைகள் ஏற்படலாம். கோபப்படுவதற்குப் பதிலாக, அமைதியான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள்.
212
ரிஷபம்
இன்று உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். நண்பர்களுடன் வெளிப்புற நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். இன்று ஒருவித சர்ச்சை உருவாகலாம். வணிகத்தில் கொடுக்கல் வாங்கல்கள் பிரச்சனையின்றி முடியும்.
312
மிதுனம்
உங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் செலவிடுவீர்கள். மாணவர்கள் தங்கள் திறமையில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். இன்று உங்கள் கவனம் சில எதிர்மறையான செயல்களில் ஈர்க்கப்படும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் வணிகத் திட்டங்களை விரைவுபடுத்த, உங்கள் மனைவியின் ஆலோசனையைப் பெறுங்கள்.
412
கடகம்
உங்கள் பொருளாதார நிலை வலுப்பெறும். முதலீடு தொடர்பான எந்தவொரு பாலிசியையும் எடுப்பதற்கு முன், அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்படுதல் தவறான முடிவுக்கு வழிவகுக்கும். அனுபவம் வாய்ந்தவர்களின் யோசனை நல்ல ஆறுதல் தரும்.
512
சிம்மம்
நாளின் இரண்டாம் பாதியில் சில பிரச்சனைகள் வரலாம். ஆன்மிக நிகழ்ச்சிகளில் நம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். உடல் நலக்குறைவு, கலை, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றால் அதிக செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது.
612
கன்னி
வரவும் செலவும் சமமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மோசமான யோசனை உங்கள் அபிப்ராயத்தை கெடுக்கும். பணிபுரியும் துறையில் திடீர் பாராட்டால் மனம் மகிழ்ச்சியடையும். குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு நிம்மதியைத் தரும்.
712
விருச்சிகம்
சமூகத்தில் நற்பெயர் கூடும். வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் வேலைகள் பாதிக்கப்படும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிக மன அழுத்தம் மற்றும் உழைப்பு காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
812
துலாம்
இன்று, தடைபட்ட பணிகள் சரியாக முடிவடையும். ஒரு கட்டத்தில் உங்கள் மனம் சிறிய விஷயங்களால் திசைதிருப்பப்படலாம். சகோதரர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். அனுசரித்து செல்வது நலம். பெண்கள் நடத்தும் வியாபாரம் வெற்றி பெறும்.
912
தனுசு
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளை கண்கானிப்பது அவசியம். வேலைத் துறையில் உங்கள் கவனத்தை முழுமையாகச் செலுத்துங்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
1012
மகரம்
எந்த விதமான பிரச்சனைக்கும் தீர்வு காண இன்றைய நாள் சிறந்த நாள். நிதி ரீதியாக சிறு பிரச்சனைகள் வரலாம். ஒருவருடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் பழகுவதில் நேரம் கடக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
1112
கும்பம்
இன்று உங்கள் இயல்பு மிகவும் தாராள மனம் கொண்டவராக இருக்கும். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள சூழல் நன்றாகப் பராமரிக்கப்படும். உங்கள் அதிகப்படியான தாராள மனப்பான்மை சில நேரம் தீங்கு விளைவிக்கும். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் தொடர்பான தொழில் வளர்ச்சி காணும்.
1212
மீனம்
தவறான செயல்களில் இருந்து விலகி, உங்கள் தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துங்கள். சில சமயங்களில் உங்கள் கோபமான பேச்சு உங்களுக்கே பிரச்சனைகளை உருவாக்கலாம். மன அழுத்தத்தால் நன்றாக தூங்குவீர்கள். மன அமைதிக்கு யோகா மற்றும் தியானத்தின் உதவியை நாடுங்கள்.