Nov 25th - இன்றைய ராசிபலன் : ரிஷபம், கடக ராசி நேயர்களே பொறுமை அவசியம்! மற்ற ராசிகளுக்கு உள்ளே!

First Published Nov 25, 2022, 5:30 AM IST

Horoscope Today- Indriya Rasipalan November 25th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (25/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

மேஷம்

உங்கள் நேர்மறை மற்றும் சீரான சிந்தனையின் மூலம் சில காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். அண்டை வீட்டாரோடு ஒருவித தகராறு ஏற்படக்கூடும். வணிகக் கண்ணோட்டத்தில் நேரம் உகந்ததாக இல்லை.
 

ரிஷபம்

ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திடீர் பெரிய செலவுகளால் நிதி நிலை மோசமடையலாம். இந்த நேரத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். குழந்தைகளின் எதிர்மறையான செயல்களால் கவலைகள் மேலோங்கும். வணிக நோக்கங்களுக்காக பணயம் மேற்கொள்ளலாம்.
 

மிதுனம்

அனுபவம் வாய்ந்த மற்றும் மூத்தவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இன்று நிறைய கற்றுக்கொள்வீர்கள். குடும்ப மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் கவனம் தேவை. இந்த நேரத்தில் எந்த வகையான முதலீட்டையும் தவிர்க்கவும். பணப் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு செயலையும் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும்.
 

கடகம்

இந்த நேரத்தில் எந்த ஒரு வேலையையும் அவசரத்திற்குப் பதிலாக பொறுமையாகச் செய்யுங்கள், உழைப்பின் பலன் கிடைக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பயணத்தின் போது தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது மனதிற்குப் பதிலாக மூளையைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
 

சிம்மம்

இன்று நீங்கள் கடின உழைப்பால் மட்டுமே வெற்றி பெற முடியும். மாணவர்கள் படிப்புடன்சார்ந்த மற்ற பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். கோவிலுக்கு சென்று வர மன அமைதி ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படலாம்.
 

கன்னி

இன்றைய கிரகப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நேரத்தை உருவாக்குகிறது. எந்தவொரு பிரச்சனையும் முடிவுக்கு வரும். கவலைகள் நீங்கும். முக்கியமான வேலைகள் குறித்து பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது உங்களுக்கு நன்மை பயக்கும். யாரிடமும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
 

துலாம்

இன்று புதிய பணிகளுக்கான திட்டமிடலுக்கு உகந்த நாள். ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டுவது உங்கள் இயல்பை அடக்கமாக மாற்றும். இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தீவிரமாக யோசிப்பீர்கள். யாரையும் அதிகமாக நம்பாமல் கவனமாக இருங்கள். இந்த நேரத்தில்பயணத்தை தவிர்ப்பது நல்லது.
 

விருச்சிகம்

முடியாத காரியம் திடீரென்று நடக்கும் போது மகிழ்ச்சி ஏற்படும் நாள். மாணவர்கள் எந்தவொரு நேர்காணல் அல்லது போட்டித் தேர்விலும் வெற்றி பெறுவார்கள். பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகளில் செலவழிக்கும் போது உங்கள் பட்ஜெட்டை கவனித்துக்கொள்வது முக்கியம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கவனமாக இருங்கள்.
 

தனுசு

இன்று உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.காணமல் போன பொன், பொருள் கிடைக்கும். நிதி தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உங்களுக்கு பொருந்தாத செயல்களை செய்வதைத் தவிர்க்கவும்.
 

மகரம்

எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வெற்றியைத் தரும். முதலீடு தொடர்பான முக்கியமான திட்டங்களும் வெற்றி பெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி குடிகொள்ளும். மற்றவர்களிடம் பேசும்போது உங்கள் கோபத்தையும் ஈகோவையும் கட்டுப்படுத்துங்கள்.
 

கும்பம்

எந்த ஒரு வேலையும் செய்வதற்கு முன், அதை ஆழ்ந்து சரிபார்த்தால் நல்ல பலன் கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். உறவின் வரம்புகளை அறிந்து கொள்வது அவசியம். மற்றவர்களை மற்ற முயற்சிக்காதீர்கள். ஒருவரின் தவறான அறிவுரை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
 

மீனம்

இன்று உங்கள் பணிகளை அவசரத்திற்கு பதிலாக நிதானமாக முடிக்க முயற்சி செய்யுங்கள். வணிக நடவடிக்கைகளுக்காக கடன் வாங்கும்போது அல்லது கடன் கொடுக்கும் போது மீண்டும் யோசியுங்கள். உங்கள் கடினமான காலங்களில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
 

click me!