Nov 24th - இன்றைய ராசிபலன் : யோகம் காணும் ராசிகள் - மிதுனம், சிம்மம், கன்னி! மற்ற ராசிகளுக்கு உள்ளே!

First Published | Nov 24, 2022, 5:30 AM IST

Horoscope Today- Indriya Rasipalan November 24th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (24/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

மேஷம்

இன்று ராசியான நாள் உங்களுக்கு. உங்கள் விருப்பப்படி வெற்றிகள் வந்து சேரும். சில வேலைகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மனதில் கவலைகள் ஏற்படலாம். எந்த வகையான பயனத்தையும் தவிர்த்தல் நல்லது. தொழில் செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 

ரிஷபம்

கொடுத்த கடன் திரும்ப வந்து சேரும். உங்கள் பணிக்கு புதிய தோற்றத்தை அளிக்க சில ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் பிரச்சனைகள் ஏற்படும்.
 

Tap to resize

மிதுனம்

வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களால் சுப செலவுகள் அதிகரிக்கும். முக்கியமான ஒன்றை இழக்க நேரிடலாம். கவனம் அவசியம். சொந்த வேலை காரணமாக வியாபார நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படலாம். அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட மனஅமைதி கிடைக்கும்.
 

கடகம்

பணம் தொடர்பான வரவு செலவு செயல்பாடுகள் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் அதிக செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். அதிகம் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்கள் கோபத்தையும் தூண்டுதலையும் கட்டுப்படுத்துங்கள். இந்த நேரத்தில் புதிய திட்டம் அல்லது திட்டமிடல் இருந்தால் ஒத்திவையுங்கள்.
 

சிம்மம்

உங்களின் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும், பிற்பகல் வேளையில் எச்சரிக்கை தேவை. திடீரென்று சில இடையூறுகள் ஏற்படலாம். சில நேரங்களில் உங்கள் அதீத தன்னம்பிக்கை மற்றும் ஆணவம் உங்கள் வேலையில் சிக்கல்களை உருவாக்கலாம். பணிபுரியும் துறையில் வேலைப்பளு கூடும்.
 

கன்னி

உங்களுக்கு வெற்றிகரமான நாள். பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறலாம். வேலைத் திட்டங்களும் வெற்றி பெறும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் கூட தீர்க்கப்பட்டும். எதிர்மறையான செயல்பாடு உள்ளவர்கள் உங்கள் வேலையைத் தடுக்கலாம். எந்த வகையான வியாபார பரிவர்த்தனைகள் தொடர்பான நடவடிக்கைகளிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.
 

துலாம்

மாணவர்களுக்கு வெற்றிகள் தேடிவந்தடையும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கலாம். குடும்பம் மற்றும் தொழில் விஷயங்களில் நல்லிணக்கம் பேணப்படும்.
 

விருச்சிகம்

எந்த ஒரு பாதகமான சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்வீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள், கோபம் மற்றும் தூண்டுதலிலிருந்து விலகி இருங்கள். எந்தவொரு செயல்களிலும் முடிவெடுக்கும் போது அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
 

தனுசு

விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். திடீரென வீட்டிற்குள் வரும் உறவினர்களால் நிம்மதி கெடும். நிதி நிலைமையில் சற்று சிரமப்படுவீர்கள். வீடு-குடும்பச் சூழலிலும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். நீங்கள் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டால் அதற்கான நேரம் கைகூடி வரும்.
 

மகரம்

நாள் நன்றாகத் தொடங்கும். உங்களின் முக்கியமான திட்டங்களில் கவனம் செலுத்தி உடனடியாக அவற்றைச் செயல்படுத்தத் தொடங்குங்கள். கடின உழைப்புக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணம் சில நேரங்களில் இருக்கும். ஆனால் அது உங்கள் யூகம் மட்டுமே. பொறுமையுடனும், நிதானத்துடனும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்படும்.
 

கும்பம்

வெற்றிக்கு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் பல திட்டங்களைத் தீட்டுவீர்கள், ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. வீட்டு செயல்பாடுகளில் கணவன் மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.
 

மீனம்

நாளின் தொடக்கத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். பிற்பகல் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளின் ஆரம்பம் சற்று வேதனையாக இருப்பதால் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். ஒரு வாகனம் அல்லது விலையுயர்ந்த மின் சாதனம் பழுதடைவது பெரும் செலவுகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் சொல்லும் ஒரு சொல் மோசமான விளைவை ஏற்படுத்தும். கவனம் அவசியம்.
 

Latest Videos

click me!