இன்று கோடீஸ்வர யோகம் அருளும் அங்காரக சதுர்த்தி! கடன் பிரச்சினை தீர.. இந்த 1 எளிய பரிகாரம் செய்தால் போதும்!!

First Published | May 23, 2023, 10:01 AM IST

செவ்வாய்கிழமை வரும் சதுர்த்தி திதியை அங்காரக சதுர்த்தி நாள் என்பர். இன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் கடன் சுமை தீரும். 

வினைகளைப் போக்கி நன்மைகளை வாரி வழங்கும் கடவுள், விநாயகர். அவரை வழிபட ஒவ்வொரு மாதம் சதுர்த்தி தினத்திலும் விரதம் இருப்பார்கள். சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெருகும். விநாயகரை வணங்க பல்வேறு விரத தினங்கள் இருந்தபோதிலும், சதுர்த்தி விரதம் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் விநாயகர் வழிபட்டால் எல்லா வளங்களும் நிரம்ப கிடைக்கும். 

திதிகளில் நான்காவதாக வரும் திதியை சதுர்த்தி திதி என்கிறார்கள். அதில் செவ்வாய்கிழமை வரும் சதுர்த்தி திதியை அங்காரக சதுர்த்தி நாள் இன்று (மே.23) . இன்றைய நாள் விநாயகரை வணங்கி விட்டு தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. தீராத கடன் சுமையால் அவதிப்படும் எவர் ஒருவரும் இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் விரைவில் கடன் தீரும். 

கடன் சுமை நீங்க! 

கடனால் அவதிப்படுவர்கள் 11 செவ்வாய்கிழமை விடாமல் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை சாற்றினால் தீராத கடன் பிரச்சினையும் தீரும். 

Tap to resize

பொதுவாக வரும் சதுர்த்தியை விட செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி ரொம்ப சிறப்பு. இந்த நாளில் விநாயகரை விரதமிருந்து வணங்கி வழிபட்டால் புது வீடு, மனை ஆகிய சொத்துகள் வாங்குவதில் தொடங்கி எல்லா தடைகளும் நீங்கும். உடல், மன ஆரோக்கியம் மேம்பட இந்நாளில் வழிபடலாம். இன்றைய தினம் விநாயகரை வணங்கி புதிய காரியங்களை தொடங்கினாலும் வெற்றி கிட்டும். குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இன்று விநாயகரை வழிபடலாம். கல்வி மேம்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். 

வறுமை நீங்க! 

குடும்பத்தில் காணப்படும் வறுமை நீங்க வெள்ளெருக்குத் திரி வைத்து நெய் தீபம் ஏற்றுங்கள். நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் விநாயகருக்குப் பின்னர் நெய் தீபம் ஏற்றுங்கள். கடன் பிரச்சனையால் மன வருத்தத்திற்கு ஆளானவர்கள் தங்களுடைய ஒரு கையில் அருகம்புல், இன்னொரு கையில் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வேண்டுதலை முடித்தபின் 'ஓம் ஸ்ரீ மஹா செல்வ கணபதியே போற்றி' என்னும் மந்திரத்தை 11 தடவை சொல்லுங்கள். பின்னர் உங்களுடைய கையில் வைத்திருக்கும் அருகம்புல்லை விநாயகர் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு, தீப தூப ஆராதனை செய்து பூஜை முடித்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: வீட்டில் கண்ணாடி உடைந்தால் நல்லதா? கெட்டதா? உண்மை என்னனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!!

சதுர்த்தி வழிபாடு 

வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை மட்டும் அனுபவித்து சந்தோஷத்திற்கு நெருக்கமாக செல்ல முடியாதவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய சதுர்த்தி வழிபாடு பயனுள்ளதாக இருக்கும். கல்வி அறிவு, ஞானம், ஆரோக்கியம், நீடித்த ஆயுள், செல்வம் ஆகியவை கிடைக்க சதுர்த்தி வழிபாடு ஏற்றது. சனி தோஷத்திற்கு ஆளாகி சிரமத்தை சந்திப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் சனியின் தாக்கத்தை குறைக்கலாம். 

இதையும் படிங்க: வழியில் கிடக்கும் பணத்தை எடுப்பது நல்லதா? கெட்டதா?

Latest Videos

click me!