Today Rasipalan 4th Apr 2023: வெளிநாட்டு வாய்ப்பு கைகூடும்..! சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்

Published : Apr 04, 2023, 05:30 AM IST

ஏப்ரல் 4ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 4th Apr 2023: வெளிநாட்டு வாய்ப்பு கைகூடும்..! சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்

மேஷம்:

குடும்பம் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். மோசமான சூழல்களில் நிதானமாகவும், அமைதியாகவும் செயல்படவும். தொழில் செய்பவர்களுக்கு ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏற்ற நேரம்.
 

212

ரிஷபம்:

உங்கள் உண்மையான கனவுகளை உணர்வதற்கான நேரம். உங்கள் பணித்திறன் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுங்கள். வேலை பரபரப்புக்கு இடையே உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். தேவையில்லாத செலவுகள், பயணங்களை தவிர்க்கவும். 
 

312

மிதுனம்:

சமூகத்தில் பெரிய மனிதர் ஒருவரின் உதவியுடன் நிலுவையில் இருந்த சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வேலையில் சில பிரச்னைகள் வரும். மன அழுத்தம் அடைய வேண்டாம். வாகனம், இயந்திரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். 
 

412

கடகம்:

இன்றைய தினம் இனிமையான நிகழ்வுடன் தொடங்கும். மாணவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அவசர முடிவுகள் பிரச்னையை கொடுக்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அதனால் பொருளாதார பிரச்னை ஏற்படும். 
 

512

சிம்மம்:

சொத்து ரீதியாக நிலுவையில் இருந்த பிரச்னை இன்று தீரும். உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு ரீதியான விவகாரங்களை சோம்பேறித்தனத்தால் தவிர்க்க வேண்டாம். தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். தொழில் ரீதியான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும். 
 

612

கன்னி:

பண விஷயங்களை இன்றே செட்டில் செய்யவும். செலவுகளை கட்டுப்படுத்தவும். தொழில் ரீதியான முடிவுகள் அனைத்தையும் நீங்களே எடுங்கள். வெளியாட்களை நம்ப வேண்டாம். மற்றவர்களின் அறிவுரை உங்களை பிரச்னையில் ஆழ்த்தும். 
 

712

துலாம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகம் தொடர்பான தேர்வில் வெற்றி கிடைக்கும். சிறிய விஷயத்திற்கு வாக்குவாதம் ஏற்படலாம். பிரச்னைகளின் போது எதிர்மறை வார்த்தைகளை தவிர்க்கவும். சொத்து பிரச்னை தொடர்பான நீதிமன்ற வழக்கு மத்தியஸ்தரின் உதவியுடன் வெற்றிகரமாக முடியும். 
 

812

விருச்சிகம்:

நீண்டகால கவலை இன்று நீங்கும். உங்கள் நேர்மறையான சிந்தனையின் மூலம் புதிய வெற்றிகள் கிடைக்கும். நெருக்கடியான சூழல்களை கோபப்படாமல் அமைதியாகவும் நிதானமாகவும் கையாளவும். தொழிலில் பொறுப்புகளும் பணிச்சுமையும் அதிகரிக்கும். 
 

912

தனுசு:

தேவையில்லாத செலவுகளை நினைத்து கவலைப்படுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் திட்டமிருந்தால் ஒத்திவையுங்கள். வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நற்செய்து கிடைக்கும்.
 

1012

மகரம்:

ஆன்மீக ஈடுபாடு மன அமைதியை அதிகரிக்கும். சிறிய  தவறு கூட பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் அதிக கவனம் தேவை. இளைஞர்கள் தவறான பாதையில் சென்றுவிடவேண்டாம். அரசு ஊழியர்களுக்கு பொறுப்பும் பணிச்சுமையும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

1112

கும்பம்:

கடும் பணிச்சுமைக்கு மத்தியிலும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள். இன்று கிடைக்கும் நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து விவகாரங்களை கையாள சரியான நேரம். பணப்பரிமாற்றங்களை ஒத்திவைக்கவும். 
 

1212

மீனம்:

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். நீங்கள் உறுதியுடன் எடுக்கும் ரிஸ்க் வெற்றியை தரும். மனம் மற்றும் உடல் ரீதியாக ஃபிட்டாக இருப்பீர்கள். அரசு சார்ந்த வேலைகளை முடிக்க வேண்டிய நேரம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories