Today Rasipalan 3rd Mar 2023: வீடு, சொத்து வாங்க ஏற்ற ராசிக்காரர் யார்..? ஈகோவை தவிர்க்க வேண்டியது யார்..?

Published : Mar 03, 2023, 05:30 AM IST

மார்ச் 3ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 3rd Mar 2023: வீடு, சொத்து வாங்க ஏற்ற ராசிக்காரர் யார்..? ஈகோவை தவிர்க்க வேண்டியது யார்..?

மேஷம்:

ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். உங்களுக்குள் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். திடீரென பிரச்னைகள் வரலாம். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தவிர்க்கலாம். வேலையில் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
 

212

ரிஷபம்:

சொத்து மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் பரபரப்பாக இயங்குவீர்கள். மிக அருமையான செய்தி வந்து சேரும். பொறுப்பை ஏற்றுக்கொண்டு உங்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். எல்லாமே நன்றாக சென்றாலும், மனதில் எதிர்மறையான சிந்தனை தோன்றும். தியானம் செய்வது மனதிற்கு அமைதியை தரும். இளைஞர்கள் அவர்களது கெரியரில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். 

312

மிதுனம்:

மனதளவில் வலிமையாக உணர்வீர்கள். உங்களது ஆளுமையை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். அனுகூலமான சந்திப்பு நிகழும். வீடு மற்றும் வாகனத்திற்கு அதிக செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படலாம்.

உங்க வீட்டின் ஏதோ ஒரு மூலையில் இந்த ஒரு அற்புத பொருளை வைத்தாலும் கூட போதும்.. கண்டிப்பா பணம் வந்து சேரும்
 

412

கடகம்:

உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும் நாள். அந்த உத்வேகத்தால் சோர்வடைய மாட்டீர்கள். எந்தவிதமான போட்டியாக இருந்தாலும் இன்று வெற்றி கிடைக்கும். ஈகோவிற்கு இடம் கொடுக்காதீர்கள். அதிகமான அவசரம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமான சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 

512

சிம்மம்:

அதிர்ஷ்டம் இன்றைய தினம் உங்கள் பக்கம். புதிய லாபங்கள் கிடைக்கும். நீண்டகால கவலை தீர்ந்து மனமகிழ்ச்சி ஏற்படும். முக்கியமான முடிவு பொருளாதார ஏற்றத்தைத் தரும். சிறிய விஷயங்களுக்காக கருத்து மோதல் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
 

612

கன்னி:

நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக செலவிடுங்கள். வீடு, சொத்து வாங்க ஏற்ற நாள். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காது. தொழில் செய்யும் பெண்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும். வயிற்றில் சிறு பிரச்னை ஏற்படலாம்.
 

712

துலாம்:

உறவில் இருந்த பழைய பிரச்னைக்கு சுமூகமாக முடிவு காண்பீர்கள். நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும். உங்களது அதிக உற்சாகம் மற்றவர்களுக்கு தொந்தரவாக அமையலாம். குடும்பத்தில் தவறான புரிதல் ஏற்படலாம். ஈகோவால் கணவன் - மனைவி இடையே மோதல் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

812

விருச்சிகம்:

நீண்டகாலமாக இருந்துவந்த தடையை தகர்ப்பதில் வெற்றி காண்பீர்கள். அதனால் திருப்தி ஏற்படும். கெரியர் விஷயத்தில் இளைஞர்கள் கவனக்குறைவாக இருப்பது எதிர்காலத்தில் பிரச்னையை தரும். அதனால் கவனம் தேவை. ஒரு முக்கியமான சந்திப்பு உங்கள் வேலையில் வளர்ச்சியை தரும்.  கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகமாகும்.

மாசி மகம் எப்போது? மகிழ்ச்சி தரும் அதன் மகத்துவம்.. ஏழு ஜென்ம பாவம் போக்கும் விரதம்..!

912

தனுசு:

குடும்பம், வேலை ஆகிய இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்யுங்கள். நெருங்கிய நண்பர் ஒருவரின் எதிர்மறையான செயல் உங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும். வீடு, வாகனம் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரியுங்கள். தொழில் மோதலில் இழப்பு ஏற்படலாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

1012

மகரம்:

தினசரி வேலையுடன், உங்கள் தனித்திறமையையும் பயன்படுத்த வேண்டிய நேரம். மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் யாருடனாவது மோதல் ஏற்படலாம். வேலையில் இடையூறுகள் ஏற்படலாம். துணையுடன் மோதல் ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

1112

கும்பம்:

பெரியோர்களுடன் நல்லுறவும், அவர்களது ஆசீர்வாதமும் கிடைக்கும். நண்பருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறும். இயந்திரங்கள், எண்ணெய் தொடர்பான தொழில்களில் நல்ல லாபம் கிட்டும். பணிச்சுமையால் குடும்பத்தில் கவனம் செலுத்த முடியாது.
 

1212

மீனம்:

உங்கள் புரிதல் மற்றும் அறிவுக்கூர்மையால் வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். கணவன் - மனைவி இடையே நல்ல புரிதல் இருக்கும். மோசமான உணவுப்பழக்கம் வயிற்றில் பிரச்னையை ஏற்படுத்தலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories