Today Rasipalan 2nd Apr 2023: வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா..? செம குட்நியூஸ் கிடைக்கும்

Published : Apr 02, 2023, 05:30 AM IST

ஏப்ரல் 2ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 2nd Apr 2023: வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா..? செம குட்நியூஸ் கிடைக்கும்

மேஷம்:

தினசரி வேலைகளை திட்டமிட்டு செய்தால் வெற்றி உங்களுக்குத்தான். சிறுதூர அல்லது நெடுந்தூர பயணத்திற்கு வாய்ப்பு. ஆன்மீக செயல்களுக்கு நேரம் ஒதுக்கவும். அது மன அமைதிக்கு உதவும். தொழில் ரீதியான வேலைகள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
 

212

ரிஷபம்:

ஸ்பெஷலான நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். வரவு அதிகரிக்கும்; அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். உங்கள் இலக்கை அடைவதில் கவனம் செலுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். 
 

312

மிதுனம்:

சில பிரச்னைகள் வரும். ஆனால் உங்களது புத்திசாலித்தனத்தால் அந்த பிரச்னைகளை சாமர்த்தியமாக தீர்ப்பீர்கள். உங்களது முக்கியமான வேலையை முடிக்க முடியாமலேயே போகும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும்.
 

412

கடகம்:

குடும்பத்தின் முக்கியமான பிரச்னையை தீர்ப்பது குறித்து ஆலோசிப்பீர்கள். பொழுதுபோக்குகளில் நேரம் செலவழிப்பீர்கள். எதிர்மறை செயல்பாடுகளிலிருந்து குழந்தைகள் விலகி இருக்க வேண்டும். சொந்த வேலையில் பிசியாக இருப்பதால், நெருங்கிய உறவினர்களை தவிர்க்க வேண்டிவரும். உறவுகளை பாதுகாப்பது அவசியம். 
 

512

சிம்மம்:

சொத்து விற்பனை வெற்றிகரமாக நடக்கும். உடல் மற்றும் மனதளவில் பலமாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒரு நபரின் எதிர்மறையான பேச்சால் குடும்ப அமைதி கெடும். டென்சன் ஆகாமல் பிரச்னையை முடிக்க முயற்சி செய்யுங்கள். பயணங்களை தவிர்க்கவும்.
 

612

கன்னி:

ஸ்பெஷலான ஒரு நபரின் வழிகாட்டுதலால் உங்கள் வேலைகளை முறையாக திட்டமிட்டு முடிப்பீர்கள். முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிப்பீர்கள். அரசு சார்ந்த வேலைகளை பாதியில் விட்டுவிடாமல் முழுமையாக முடித்துவிடுங்கள். இல்லையெனில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் தள்ளியே இருக்கவும்.
 

712

துலாம்:

எப்பேர்ப்பட்ட சூழலிலும் நீங்கள் கடுமையாக உழைப்பதால், தேங்கிக்கிடந்த வேலைகள் அனைத்தும் இன்று முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும். பங்குச்சந்தை மாதிரியான முதலீடுகளை தவிர்க்கவும். சில பிரச்னைகளில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது.
 

812

விருச்சிகம்:

உங்கள் அனைத்து பலங்களையும் பயன்படுத்துங்கள். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். அவசியமற்ற வேலைகளில் நேரத்தை வீணாக செலவழிக்காதீர்கள். பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். 
 

912

தனுசு:

மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தனிப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் வழிகாட்டுதலை அலட்சியப்படுத்த வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் திட்டங்களை பகிரவேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழிலில் புதிய தொடக்கம் எதுவும் வேண்டாம். இப்போது ரிஸ்க் எடுத்தால் பெரிய இழப்பு ஏற்படும்.
 

1012

மகரம்:

எந்த வேலையையும் முறையாக திட்டமிட்டு செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் பிரச்னை ஏற்படும். அதனால் கோபத்தை கட்டுப்படுத்தவும். சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்யுங்கள்.  சொத்து வாங்கவோ விற்கவோ ஏற்ற நேரம் இது.
 

1112

கும்பம்:

வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உத்யோகத்தில் கவனம் செலுத்துவது அவசியம். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 

1212

மீனம்:

அனுபவஸ்தர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வீர்கள். பண விஷயத்தில் யாரையும் நம்பவேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். நீதிமன்ற வழக்குகளை முடியுங்கள். இல்லையெனில் ஒத்திவைப்பது நல்லது. தொழிலில் ஊழியர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories