History of Pongal Best Timings and Traditional dress Code 2026 Tamil : 2026-ல் பொங்கல் வைக்க வேண்டிய மங்கல நேரம் மற்றும் பண்டிகையின் போது அணிய வேண்டிய பாரம்பரிய உடைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அப்படி எத்தனையோ பேர் தை திருநாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், இந்த தை மாதத்தில் தான் புதிதாக தொழில் தொடங்குபவர்களாக இருக்கட்டும், திருமணம், புதிய வீட்டிற்கு மாறுதல், நிச்சயதார்த்தம், காதணி விழா என்று சுப நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். மகிழ்ச்சி நிறைந்த மாதம் அல்லது புதிய தொடக்கத்திற்கான ஒரு மாதம் என்பார்கள்.
தை மாதத்தில் திருமணம் நடந்தால் புதுமண தம்பதிகள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். அதே போன்று குழந்தை பாக்கியமும் நல்லபடியாக அமையும். மேலும், வீடு கட்டும் வேலையும் தடையில்லாமல் நடந்து முடியும். அப்படிப்பட்ட அற்புதமான இந்த தை மாதத்தின் முதல் நாளில் தான் சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள்.
24
Traditional dress for Pongal festival
சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள். இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய காலத்தில் தை திருநாள். இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். சூரிய பகவான் விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு நினைவு கூரும் விதமாக பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால்தான் நம் தைத்திருநாளுக்கு கரும்புகள் வாங்கி சூரிய பகவானுக்கு படைத்து நாம் தைப்பொங்கலாக தற்போது கொண்டாடுகிறோம்.
34
Auspicious time to cook Pongal 2026
தைப்பொங்கல் அன்று குடும்ப தலைவன் தலைவி அதிகாலை 4 மணி முதல் 5:00 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகளான ஆண்கள் வேட்டி சட்டையும் பெண்கள் புடவையும் அணிந்திருக்க வேண்டும் இதுவே நம் தமிழ்நாட்டின் பாரம்பரியம். பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் என்னவென்றால் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை ஏனென்றால் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கலை வைத்துவிட்டு சூரிய பகவான் வந்தவுடன் அந்த பொங்கலை படைத்து வழிபடுவது தான் நம் பாரம்பரியத்தில் உள்ளது
44
History of Pongal in Tamil
அதேபோல் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கல் வைத்து விட வேண்டும். உங்களை வைப்பதற்கு ஒரு அழகிய மண்பானை மண் குயவரிடமிருந்து பெற்று அதற்கு வண்ண நிறங்களை பூசி மண் பானையிலேயே பொங்கல் வைக்க வேண்டும் இனிப்பாக இருப்பதால் வெல்லம் பச்சரிசி பாசிப்பருப்பு நம் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு உலர்ந்த திராட்சைப் பழங்கள் ஆகியவை சேர்த்து சுவையான இனிப்பான உங்களை நாம் செய்ய வேண்டும்.
சூரிய பகவான் உதித்தது பிறகு பொங்கலை வைத்து நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருளான நம் விவசாயத்தில் பெற்ற பொருட்களை வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய பகவானுக்கு உகுந்த கரும்பு படையலாக காய்கள் கனிகள் வைத்து படைக்க வேண்டும் அவர்கள் பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கூறி நம் தைத்திருநாளில் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.