
சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள். இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய தை பொங்கல் விழா. இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். சூரிய பகவான் விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால்தான் நம் தைத்திருநாளுக்கு கரும்புகள் வாங்கி சூரிய பகவானுக்கு படைத்து நாம் தைப்பொங்கலாக தற்போது கொண்டாடுகிறோம்.
தைத்திருநாள்:
தைப்பொங்கல் தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருநாள் என்றே கூறலாம். தை 1ம் தேதி இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.நம் முன்னோர்கள் விவசாயத்தில் சேர்த்து வைத்த நெல், காய்கறிகள் பழங்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவரையும் சூரிய பகவான் படைத்து வழிபடுவதற்கு இந்த தைத்திருநாளை கொண்டாடப்பட்டு வந்தனர். காலப்போக்கில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் இடம்பெற்றது. தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக இந்த கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வருகின்றார்கள் இது நம்முள் ஒரு திருவிழாவாகவே மாறிவிட்டது.
தைப்பொங்கல் அன்று குடும்ப தலைவன் தலைவி அதிகாலை 4 மணி முதல் 5:00 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகளான ஆண்கள் வேட்டி சட்டையும் பெண்கள் புடவையும் அணிந்திருக்க வேண்டும். இதுவே நம் தமிழ்நாட்டின் பாரம்பரியம். பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் என்னவென்றால் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை. ஏனென்றால் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கலை வைத்துவிட்டு சூரிய பகவான் வந்தவுடன் அந்த பொங்கலை படைத்து வழிபடுவது தான் நம் பாரம்பரியம்.
அதேபோல் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கல் வைத்து விட வேண்டும். பொங்கல் மண் பானையில் தான் வைக்க வேண்டும். கேஸ் அடுப்பில் பாத்திரத்தில் பொங்கல் வைக்க கூடாது. பொங்கல் வைக்க முதலில் ஒரு அழகிய மண்பானை மண் குயவரிடமிருந்து பெற்று அதற்கு வண்ண நிறங்களை பூசி மண் பானையிலேயே பொங்கல் வைக்க வேண்டும். இனிப்பாக இருப்பதால் வெல்லம் பச்சரிசி பாசிப்பருப்பு நம் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு உலர்ந்த திராட்சைப் பழங்கள் ஆகியவை சேர்த்து சுவையான இனிப்பான பொங்கலை நாம் வைக்க வேண்டும் .
சூரிய பகவான் உதித்து பிறகு பொங்கலை வைத்து நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருளான நம் விவசாயத்தில் பெற்ற பொருட்களை வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய பகவானுக்கு உகந்த கரும்பு படையலாக காய்கள் கனிகள் வைத்து படைக்க வேண்டும். அவர்கள் பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கூறி நம் தைத்திருநாளில் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படித்தான் முறையாக தைத் திருநாளை கொண்டாட வேண்டும். சூரிய பகவானையும் வழிபட வேண்டும்.