
உழவர்கள் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை தொடங்கும் நாளே தைப்பொங்கல். தைப்பொங்கலின் முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தைப்பொங்கல்: தை பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடைத் திருவிழா.உழவர்கள் சூரியன் இயற்கை கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. இது புது நெல், பால், நெய், வெல்லம் சேர்த்துப் புதுப் பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைத்து, "பொங்கலோ பொங்கல்" என ஆரவாரித்து செல்வத்தையும் வளத்தையும் வரவேற்கும் விழா. இது மார்கழி முடிந்து தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் உழவர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
தை மாதம் முதல் நாள் தை பொங்கல் என்று நம் அனைவருக்கும் தெரிந்ததே .இந்த தைப்பொங்கல் ஆங்கில மாதத்திற்கு ஜனவரி மாதம் 14, 15, 16,17 நாட்களில் கொண்டாடப்படும் ஜனவரி 14-ம் தேதி போகியும் 15-ஆம் தேதி தைப்பொங்கலும் அதாவது உழவர் திருநாள் என்றும் கூறப்படும். பதினாறாம் தேதி விவசாயத்துக்கு முக்கிய அம்சங்கள் இருக்கும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 17ஆம் தேதி அன்று காணும் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது இதன் சிறப்புகளை நாம் இன் தொகுப்பில் பார்க்கலாம்.
போகி பொங்கல்: ஜனவரி 14-ஆம் நாள் இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது அதாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் இதன் பழமொழியாகும் அதாவது பழைய பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை உருவாக்குவது என்பதே இதன் பொருளாகும். நம் வீட்டில் 14ஆம் நாளன்று வீட்டில் உள்ள குப்பைகளை எரித்துவிட்டு சுத்தபத்தமாக வழிபடுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது நம் மனதில் இருக்கும் குப்பைகளையும் எரித்துவிட்டு புதிய இனிய தொடக்கத்தை தொடங்குவோம் என்பதும் ஒரு அர்த்தமாக கருதப்படுகிறது.
அன்று எந்த வழிபாடு இல்லாவிட்டாலும் வீட்டையும் சுத்தம் செய்தல் வெள்ளை அடித்தல் வீட்டிற்கு அலங்காரப் பொருட்களை அலங்கரித்தல் சாமி விளக்குகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் அனைத்தும் நாம் அன்று பார்ப்போம் அது மட்டுமல்லாமல் மறுநாள் காலை தைப்பொங்கல் உதிப்பதால் நம் முன்னெச்சரிக்கையாகவே அனைத்து விஷயங்களையும் செய்வதற்கான நாள் என்றும் கூறப்படுகிறது. சிறியவர்கள் மேலும் தட்டிக்கொண்டு தெருகளில் சுற்றி வருவதும் நாம் பார்ப்போம். சிறுவர்களுக்கு புத்தாடை எப்போது அழியப் போகிறோம் என்று நினைவில்லையே தைப்பொங்கலுக்காக மகிழ்ச்சியுடன் காத்து க்கொண்டிருப்பார்கள்.
சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள். இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய தைபொங்கல் விழா. இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். சூரிய பகவான் விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால்தான் நம் தைத்திருநாளுக்கு கரும்புகள் வாங்கி சூரிய பகவானுக்கு படைத்து நாம் தைப்பொங்கலாக தற்போது கொண்டாடுகிறோம்.
தைத்திருநாள்: தைப்பொங்கல் தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருநாள் என்றே கூறலாம். தை 1ம் தேதி இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.நம் முன்னோர்கள் விவசாயத்தில் சேர்த்து வைத்த நெல், காய்கறிகள் பழங்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவரையும் சூரிய பகவான் படைத்து வழிபடுவதற்கு இந்த தைத்திருநாளை கொண்டாடப்பட்டு வந்தனர். காலப்போக்கில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் இடம்பெற்றது. தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக இந்த கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வருகின்றார்கள் இது நம்முள் ஒரு திருவிழாவாகவே மாறிவிட்டது.
தைப்பொங்கல் அன்று குடும்ப தலைவன் தலைவி அதிகாலை 4 மணி முதல் 5:00 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகளான ஆண்கள் வேட்டி சட்டையும் பெண்கள் புடவையும் அணிந்திருக்க வேண்டும் இதுவே நம் தமிழ்நாட்டின் பாரம்பரியம். பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் என்னவென்றால் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை ஏனென்றால் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கலை வைத்துவிட்டு சூரிய பகவான் வந்தவுடன் அந்த பொங்கலை படைத்து வழிபடுவது தான் நம் பாரம்பரியத்தில் உள்ளது.
அதேபோல் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கல் வைத்து விட வேண்டும். உங்களை வைப்பதற்கு ஒரு அழகிய மண்பானை மண் குயவரிடமிருந்து பெற்று அதற்கு வண்ண நிறங்களை பூசி மண் பானையிலேயே பொங்கல் வைக்க வேண்டும் இனிப்பாக இருப்பதால் வெல்லம் பச்சரிசி பாசிப்பருப்பு நம் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு உலர்ந்த திராட்சைப் பழங்கள் ஆகியவை சேர்த்து சுவையான இனிப்பான உங்களை நாம் செய்ய வேண்டும் .
சூரிய பகவான் உதித்தது பிறகு பொங்கலை வைத்து நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருளான நம் விவசாயத்தில் பெற்ற பொருட்களை வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய பகவானுக்கு உகுந்த கரும்பு படையலாக காய்கள் கனிகள் வைத்து படைக்க வேண்டும் அவர்கள் பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கூறி நம் தைத்திருநாளில் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். அதன் பிறகு நாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் இடம்பெற்றது ஜல்லிக்கட்டு. நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது இந்த தைப்பொங்கல் திருநாள் என்றும் ஜல்லிக்கட்டு மதுரை நடைபெறப் போவதாக கூறப்படுகிறது. தமிழின் பாரம்பரத்தையும் கலாச்சாரத்தையும் நம் வீர விளையாட்டுகளை எடுத்துக்காட்டுவதாக இந்த ஜல்லிக்கட்டு அமைகிறது.
காணும் பொங்கல்: தமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் கூடி மகிழ்ந்து பொங்கல் பண்டிகையை நிறைவு செய்கின்றனர்.மக்கள் தங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களைக் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்குமிடங்களுக்கும் சென்று மகிழ்ச்சியாக இருப்பார்.