உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கான நற்செய்தி இதோ..!

தினமும் கோயிலுக்கு செல்வது கடவுளை பூஜை செய்து வணங்குவது  மட்டும் ஆன்மீகம் அல்ல. அது ஒரு ஆழ்கடல் சிந்தனை. மேலும் ஆன்மீக அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ள இதனை படிக்கவும்...
 

ஆன்மீகம் ஒரு மனிதனை மிகவும் நற்குணம் உடையவனாக மாற்றும். ஆன்மீக நிலையை அடைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்களிடம் இருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாக உங்களை நல்ல பண்புகள் உடையவராக மாற்றும். ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மன அமைதியை அடையும்போது ஆன்மீகம் அவருக்குள் எழுகிறது. அவர்கள் தங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவுடன் ஒன்றாக மாறுகிறார்கள். ஆன்மீக ஒரு நபரை அதிக மகிழ்ச்சியை நோக்கி வழிநடத்தும்.  

ஆன்மீகம் அடைய விருப்புவோர் பின்பற்ற வேண்டியவை:

நீங்கள் எதற்கும் பயப்படாமல், சவால்களையும் தடைகளையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வீர்கள். நிராகரிப்பு, தனிமை, தோல்வி போன்ற உங்களைப் பயமுறுத்தும் விஷயங்களை விட்டுவிட்டு, மகிழ்ச்சியான பகுதியைப் பற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினால், நீங்கள் ஆன்மீகத்தை அடைவதற்கான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.


ஒருவர் உங்களிடம் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது உங்களைத் தொந்தரவு செய்தால், நீங்கள் ஒரு உயர்ந்த மனநிலையை அடைந்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதனால் எதிர்மறைக்கு உங்கள் வாழ்க்கையில் இடமில்லை என்று புரிந்து கொள்வீர்கள்
 

அறிவைப் பெறுவதற்கான ஏக்கம் மற்றும் உங்கள் இலக்குகளை அடைய முயற்சிப்பது நீங்கள் ஒரு ஆன்மீக நபர் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் ஆர்வமாக இருப்பது பண அறிவு பற்றி அல்ல, உலகம் பற்றிய விஷயங்கள், உணர்ச்சிகள், ஆன்மீக செயல்முறைகள் போன்றவை உங்களுக்கு மிகவும் ஆர்வமாக உள்ளன. 

இதையும் படிங்க: வீட்டு பூஜை அறையில் தண்ணீர் வைப்பதால் இவ்ளோ நன்மைகளா?!

கருணை என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்கும் ஒன்று ஒரு ஆன்மீக நபரின் முக்கிய அடையாளம் ஆகும். குறிப்பாக எப்போதும் மகிழ்ச்சியாகவும் மற்றவர்களிடம் அன்பாகவும் இருப்பதே ஆகும். மக்களை இழிவுபடுத்தவோ, விமர்சிக்கவோ விரும்புவதில்லை. மாறாக அன்பான வார்த்தைகளையே மற்றவர்களிடம் பேசுவார்கள். 

தியானம் என்பது உள் அமைதியைப் பெற உதவுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே பொறுமை மற்றும் அமைதியான மனநிலையுடன் தியானம் செய்யும் திறன் உள்ளது. ஆனால் சிலர் கவனச்சிதறல் அடைகிறார்கள். மேலும் அவர்களின் தியான நேரத்தை ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே வைத்திருப்பார்கள். அதேசமயம் ஒருவர் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும்போது அது உங்களை உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், உயர்ந்ததாகவும் உணர வைக்கும்.

Latest Videos

click me!