வீட்டு பூஜைகளின்போது எப்போதும் தண்ணீர் பயன்படுத்துவார்கள். தீர்த்தம் இல்லாத பூஜைகளே கிடையாது. அது ஏன் என்று யோசனை செய்திருக்கிறீர்களா? ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டு பூஜை அறையில் செம்பு அல்லது பிற உலோக பாத்திரத்தில் தண்ணீர் வைப்பார்கள். இந்த தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். அப்போது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிப்பார்கள். இப்படி பூஜையில் பயன்படுத்திய நீரை வீட்டில் தெளித்தால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை இந்த பூஜை தண்ணீர் உறிஞ்சுகிறது.
செம்பு பாத்திரங்கள் தண்ணீரை வைத்திருப்பதற்கான மிகவும் புனிதமான உலோகமாகக் கருதப்படுகிறது. வீட்டு பூஜை அறையில் உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பது வீட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. தண்ணீர் வருண பகவானை குறிக்கிறது. அதனால் தான் பூஜை அறையிலும் தண்ணீர் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால் அனைத்து தெய்வங்களும் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்படுவார்கள்.
இறைவனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் தண்ணீர் கொடுக்காமல் வழிபாடு முழுமையடையாததாக கருதப்படுகிறது. வீட்டில் வைத்து வழிபடும் நீரில் சில துளசி இலைகளைப் போட்டால், அந்த நீர் மிகவும் புனிதமாகும் என்பது ஐதீகம். இந்த நீர் ஒரு புனித நதியின் நீரை போல புனிதமாக கருதப்படுகிறது. இதனால் வழிபாட்டுத் தலத்தை தூய்மையாக வைத்திருக்க முடியும். ஆகவே தான் பூஜை அறையில், கோயில்களில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் தண்ணீர் வைப்பது அவசியம் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் அதிர்ஷ்டம் பெருக! மூங்கில் செடியை இந்த திசையில் வையுங்கள்!! பணமழை விடாமல் கொட்டும்!!
வழிபாட்டுத் தலத்தில் வைக்கப்படும் நீர் செழிப்பின் அடையாளம். வழிபடும் இடங்களில் வைக்கும் நீரை நோக்கி நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் வைக்கும் நீரை மறுநாள் கூரையில் ஊற்றிவிட்டு தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். இரும்பு பாத்திரங்களில் நீர் வைப்பதை தவிருங்கள். அதனால் நேர்மறை சக்திகளை கிரகித்து கொள்ள முடியாது. ஏனென்றால் அது எமனுக்கு உரிய உலோகம். கவனம்!
இதையும் படிங்க: சீக்கிரம் கடன் அடைபட! செவ்வாய்கிழமை இந்த எளிய பரிகாரம் செய்யுங்க! முருகபெருமான் உடனே உதவுவார்!