குருப்பெயர்ச்சி 2023 ராசிபலன்: அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போவது யாருக்கு?

First Published | Apr 21, 2023, 6:00 AM IST

ஏப்ரல் 22ம் தேதி குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார். குருப்பெயர்ச்சி ராசிபலனை பார்ப்போம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலனை வழங்குகிறது என்று விரிவாக பார்ப்போம். 

மேஷம்:

ராசிக்கு குரு வருவதால் யோக பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகள், அதிர்ஷ்டம் மேம்பட்ட நிலையில் இருக்கும். வயதானவர்களுக்கு குழந்தைகளால் நற்செய்தி கிடைக்கும். திருமணம், புத்திரம் ஆகிய பாக்கியங்கள் வயதுக்கேற்ப நடக்கும். ராகு உங்கள் ராசியில் அமர்ந்து சாதகமற்ற பலன்களை தந்துவந்த நிலையில், குரு ராகுவை தொட்டு சுபப்படுத்துவதால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; அதை சரியாக பயன்படுத்திக்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்னைகள் தீரும். 
 

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு குரு செல்கிறது. சுபச்செலவுகள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். வயதின் தேவைக்கேற்ற பொருட்கள் கிடைக்கும். திறமைக்கேற்ற வேலைகள் கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு பாஸ்போர்ட், விசா பிரச்னைகள் தீர்ந்து வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
 

Tap to resize

மிதுனம்:

தொட்டதெல்லாம் பொன்னாகும். மிதுன ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு வருவதால் கல்வி, வேலை, பெற்றோர், வாழ்க்கைத்துணை என அவரவர் வயதிற்கேற்றாற்போல் லாபம் கிடைக்கும். தொழிலில் மேன்மையும் வெற்றியும் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளில் இழந்த பணம், கௌரவம் ஆகியவற்றை திரும்ப பெறுவீர்கள். கஷ்டத்தில் இருந்துவந்த மிதுன ரரசிக்கார்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். வெற்றி, புகழ் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடந்துவிடும்.
 

கடகம்:

கடக ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கும் நிலையில், குரு 10ம் இடத்திற்கு செல்வதால் தொழிலை பாதுகாப்பார். 10ம் இடத்தில் குரு - ராகு சேர்க்கையால் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைப்பு உருவாகும். அந்நிய மொழியினரால் நன்மை கிடைக்கும். வேலை, தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வேலையில் யாரையும் நம்பக்கூடாது. பெரிய கஷ்டங்கள் கிடைத்துவிடாமல் தடுக்கும்.

சிம்மம்:

ராசிக்கு 9ம் இடத்தில் குரு வருவதால் உன்னதமான அமைப்பு இது. ராகு ஏற்கனவே 9ம் இடத்தில் இருந்து கல்வி, வேலையில் தடையை கொடுத்து கொண்டிருந்த நிலையில், அந்த நிலை இனி மாறும். உடல், மனம் உற்சாகம் பெறும். கடன் தொல்லைகள் நீங்கும். குடும்ப குழப்பங்கள் தீரும். சம்பாத்தியம் நன்றாக இருக்கும். வேலை, தொழில் சிறப்பாக அமையும். திறமையை காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருமணம், புத்திர பாக்கியங்கள் கிடைக்கும்.
 

கன்னி:

கன்னி ராசிக்கு சாதகமற்ற 8ம் இடத்திற்கு குரு செல்கிறது. ஆனால் சனி உங்களுக்கு சாதகமான இடத்தில் இருப்பதால், எதையும் சமாளிக்கும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். அதனால் குரு 8ம் இடத்தில் இருந்தாலும் பெரிய பிரச்னை இல்லை. கன்னி ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தை குரு பார்ப்பதால் பண வரவு வரும். ஆன்லைன், பங்குச்சந்தைகளில் பணத்தை இழந்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். வெற்றியே கிடைக்கவில்லை என்றிருந்தவர்களுக்கு தொழில், உத்யோகம், அலுவலகத்தில் வெற்றியும் நற்பெயரும் கிடைக்கும். 
 

துலாம்:

ராசியை குரு பார்ப்பது மிகச்சிறந்த அமைப்பு. அந்தவகையில், மேஷத்திற்கு சென்று துலாம் ராசியை 7ம் பார்வையாக குரு பார்ப்பது மிகச்சிறப்பு. வாழ்க்கைத்துணை, நண்பர்களால் நல்லது நடக்கும். திருமண உறவு பலப்படும். முதல் திருமணம் தோல்வியடைந்து, 2வது திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்லமுறையில் நடக்கும். உங்களைத் தேடி உதவிகள் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்கும்.
 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். குரு 2, 10, 12ம் இடங்களை பார்ப்பதால் வாயால் பிழைக்கும் அமைப்பு ஏற்படும். எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை சுப கடன் வாங்கி நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு திருமணம், வளைகாப்பு ஆகிய நிகழ்வுகள் நடக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். உண்மையாக உழைப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வழக்கறிஞர், மார்க்கெட்டிங், கமிஷன் ரீதியான தொழில் செய்பவர்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும்.
 

தனுசு:

தனுசு ராசிக்கு 5ம் இடத்திற்கு சென்று, ராசியை குரு பார்ப்பதால் அனைத்து நல்லதுகளும் நடக்கும். ஏழரை சனி முடிந்து சனி 3ம் இடத்திற்கு சென்றுவிட்ட நிலையில், குருவும் 5ம் இடத்திற்கு செல்வதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உற்சாகம், புத்துணர்ச்சி கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு தேவையானது கிடைக்கும். அந்தந்த வயதிற்கேற்றவாறு தேவையானது கிடைக்கும். உழைப்பைவிட, 2 மடங்கு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம், லாபம் கண்டிப்பாக கிடைத்தே தீரும். அரசு வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். பழைய வேலையை இழந்தவர்களுக்கு அதைவிட சிறந்த வேலை கிடைக்கும். திருமணம் சார்ந்த அனைத்து நல்லதுகளும் நடக்கும். அடுத்த ஓராண்டுக்கு மிகச்சிறந்த பாக்கியசாலிகள் தனுசு ராசிக்காரர்கள் தான். 
 

மகரம்:

மகர ராசிக்கு 3ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு குரு பெயர்வது சிறப்பு. 3ம் இடத்தில் இருந்த குரு உங்களுக்கு நல்லது செய்யவேயில்லை. கடந்த 3 ஆண்டுகளாக மிகமோசமான துன்பங்களை அனுபவித்த நிலையில், அந்த நிலை படிப்படியாக மாறும். தொழிலில் இனிமேல் தான் நல்ல மாற்றம், வளர்ச்சி கிடைக்கும். இடம் மாறுதலால் நன்மைகள் கிடைக்கும். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல மாறுதலாக அது இருக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த நிலை மாறி நல்ல அமைப்பு உருவாகும். 
 

கும்பம்:

கும்ப ராசிக்கு தன ஸ்தானமான 2லிருந்து 3ம் இடத்திற்கு குரு பெயர்கிறார். 3ம் இடத்திலிருந்து 7ம் இடத்தை பார்ப்பதால், திருமணம் தாமதமானவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். பூர்வீகத்திற்கு திரும்பி தொழில் செய்யும் அமைப்பு, பூர்வீக சொத்தை பரஸ்பர புரிதலுடன் பிரித்துக்கொள்ளும் அமைப்பு உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சமீபத்தில் தொழில் தொடங்கி கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும்.  இளைஞர்கள் தவறான வழிகளில் சென்றுவிட வேண்டாம். 
 

மீனம்:

மீன ராசிக்கு அற்புதமான நலன்களை கொடுக்கும் வகையில் குரு 2ம் இடத்திற்கு செல்கிறார். இதுவரை ராகு 2ம் இடத்தில் இருந்து வருவாயை தடுத்து, குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தி கொண்டிருந்தார். இப்போது குரு மேஷத்தில் இருக்கும் ராகுவை தொட்டு அவரை சுபப்படுத்துவதால் அந்த நிலைகள் மாறும். சுபச்செலவுகள் ஏற்படும். கடந்த காலத்தில் பிறரிடம் ஏமாந்தவர்கள், பங்குச்சந்தைகளில் ஏமாந்தவர்களுக்கு இழந்த பணம் மீண்டும் கிடைக்கும்.  குடும்பச்சண்டை, கணவன் - மனைவி பிரிவு ஆகிய அனைத்தும் நீங்கி குடும்பச்சூழல் அற்புதமானதாக மாறும்.  எதிர்பாராத லாபம், அதிர்ஷ்டம் கிடைக்கும். மறைமுகமான வழிகளில் தனலாபம் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். 
 

Latest Videos

click me!