தவறுதலாக கூட இந்த நேரத்தில் தங்க நகையை அடகு வைக்காதீங்க! அப்புறம் மீட்கவே முடியாம போய்டும்!!

First Published | Apr 20, 2023, 6:00 PM IST

தங்க நகைகளை குறிபிட்ட நேரத்தில் தான் அடகு வைக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

ஒவ்வொரு காரியங்களை செய்வதற்கும் நல்ல நாள், நல்ல நேரம் என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தங்க நகைகள் வாங்கும் நேரம், அவற்றை அடகு வைக்கும் நேரம் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தது. சில நேரங்களில் அதை செய்தால் மட்டுமே வீட்டில் தங்கம் மேலும் பெருகும். கடனை அடைக்கும் போது கூட நாம் நல்ல நேரம் பார்த்து தான் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். நாம் ராகு காலம், எமகண்டம் நேரங்களில் எப்படி சில நல்ல காரியங்களை தவிர்க்கிறோமோ, அப்படி தான் குளிகை நேரமும். 

குளிகை நேரத்தில் எந்த நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். குறிப்பாக கடன் வாங்கக் கூடாது. ஆனால் இந்த நேரத்தில் வாங்கும் தங்க நகைகள் மட்டும் பன்மடங்காக பெருகும் என்பது ஐதீகம். அதெப்படி என்கிறீர்களா? குளிகை நேரம் என்றால் அதிர்ஷ்டமான நேரம். சனிபகவானின் மகனான குளிகன் தான் குளிகை நேரத்தில் ஆதிக்கம் செலுத்துவான். இந்த நேரத்தில் நாம் செய்யும் காரிங்கள் பன்மடங்காக பெருகும் என்பது ஐதீகம். மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் காரியங்களை குளிகை நேரத்தில் செய்யலாம். அதேநேரம் எந்த காரியம் மீண்டும் மீண்டும் நடக்கவே கூடாது என நினைக்கிறோமோ அதனை குளிகை நேரத்தில் நிச்சயம் செய்யக்கூடாது. 

Tap to resize

தங்க நகையை அடகு வைப்பது, கடன் பெறுவது, இறந்தவர்களின் உடலை தூக்குவது ஆகிய செயல்களை குளிகை நேரத்தில் மறந்தும் செய்ய வேண்டாம். கவனமாக இருங்கள். ஏனென்றால் அந்த காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பது ஐதீகம்.

ஒருவர் குளிகை நேரத்தில் கல்யாணம் செய்தால் அவருடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. விரைவில் விவாகரத்து கூட பெற்று பிரியலாம். அதனால் தான் குளிகை நேரத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். குளிகை நேரத்தில் கடனை வாங்க கூடாது; ஆனால் திரும்ப செலுத்தலாம். குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் பண வரவு உண்டாகி கடனை முழுவதும் அடைக்கும்படி சூழலை உருவாக்கும். குளிகை நேரம் அவ்வளவு அதிர்ஷ்டம் வாய்ந்தது. 

இதையும் படிங்க: அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதியா? 23ஆம் தேதியா? எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும்!!

குளிகை நேரத்தில் சேர்த்து வைக்கும் பணம் பலமடங்கு பெருகும். பணத்தை நம்மிடம் ஈர்க்கும் ஆற்றல் சிவப்பு வண்ணத்திற்கு உண்டு. குளிகை நேரம் பார்த்து கண்ணாடி கிண்ணத்தில் சிவப்பு பட்டு துணியை விரித்து வையுங்கள். அந்த பட்டுத்துணி போர்த்திய கிண்ணத்தில் பணத்தையும் போட்டு விடுங்கள். பிறர் மீண்டும் மீண்டும் பார்க்காத முடியாத இடத்தில் இதனை வையுங்கள். இந்த கிண்ணத்தில் முடிந்த அளவு பணம் சேமிக்க வேண்டும். தொடர்ந்து குளிகை நேரத்தில் பணம் சேமித்தால் பணம் குவிந்து கொண்டே இருக்கும். இரு தொடர் சேமிப்பாக இருக்க வேண்டும். தினசரி செலவுக்கு எடுக்க வேண்டாம். வீடு கட்ட, தொழில் தொடங்க, நிலம் வாங்க போன்ற இதனை செலவுக்கு பயன்படுத்துங்கள். காரியத் தடை ஏதுமின்றி எல்லாம் நன்றாக நடக்கும். அட்சய திருதியை நாளிலும் கூட நீங்கள் வாங்கும் தங்கம் குளிகை நேராமாக பார்த்து வாங்குங்கள். தவிர குரு, சுக்கிர ஓரை ஆகியவை பார்த்தும் வாங்கினால் நல்லது. 

இதையும் படிங்க: யம்மாடியோவ்..நயன்தாரா சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? ஜெட் விமானம் முதல் ஸ்கின்கேர் நிறுவனம் வரை பெரிய லிஸ்ட்!

Latest Videos

click me!