மிதுனம்:
குரு சண்டாள தோஷம் நீங்குவதால் நாளை (ஜூன்.21) முதல் அமோகமான பலனை மிதுன ராசியினர் அனுபவிப்பார்கள். மிதுன ராசியின் லக்ன வீட்டில் புதாதித்ய ராஜயோகமும், அதே சமயம் பத்ரா ராஜயோகமும் உருவாகுவதால் வியாபாரம் செழிக்கும். கணிசமான லாபம் கிடைக்கும். எலக்ட்ரானிக், மேக்கப் ஆகிய துறையில் பணிபுரிபவர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும். பழைய முதலீடு நல்ல லாபத்தை அளிக்கும். புத்திக்கூர்மையுடன் வேலை செய்தால் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.