இந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் டாப் லெவலுக்கு போகப் போகுது!! செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் பொற்காலம்!!

First Published | Jun 19, 2023, 10:19 AM IST

சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிர சேர்க்கை உருவாகும் காரணத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல பலனை அனுபவிப்பார்கள். 

செவ்வாய் கிரகம் ஜூலை 01 ஆம் தேதியில் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதன் தொடர்ச்சியாக சுக்கிரன் ஜூலை 07இல் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இப்படி சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிர சேர்க்கை நடைபெறுவது 20 வருடங்களுக்கு பிறகு ஏற்படுகிறது. இதன் பலனை எல்லா ராசிகளும் அனுபவித்தாலும், 3 ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவு அதிர்ஷ்டம் கிடைக்க பெறுவார்கள். 

கடகம்

இந்த ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகுவதால் திடீர் பண வரவிற்கு வாய்ப்புண்டு. உங்களுடைய பேச்சு நல்ல தாக்கத்தை உண்டாக்கும். அயல்நாட்டில் படிக்க அல்லது வேலை பார்க்க விரும்புபவர்கள் இப்போது முயன்றால் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். மீடியா, மார்கெட்டிங் ஆகியவற்றில் பணி செய்பவர்கள் அமோகமான பலனை அடைவார்கள்.  

Tap to resize

மேஷம்

இந்த ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. இந்த நேரத்தில் குழந்தைகள் நல்ல செய்திகளை சொல்வார்கள். இழுபறியாக கிடந்த பணம் கைக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு பெருகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் பாதியில் கிடக்கும் வேலைகள் கூட வெற்றியடையும். 

இதையும் படிங்க: இந்த 5 கெட்ட பழக்கம் உங்க கிட்ட இருந்தா டக்னு மாத்திக்கோங்க... மீறினால் வறுமையை கொண்டு வரும்!!

துலாம்

இந்த ராசியின் 11ஆம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. உங்கள் வருமானம் உயர வாய்ப்புள்ளது. புதிய வருமானம் பெருகும். வியாபாரம் செய்பவர்களுக்கு இப்போது அமோகமான காலமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். சமுதாயத்தில் மரியாதை அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய முதலீடு இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஜூலையில் நடைபெறும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை காலத்தில் புதிய தொழில் தொடங்கினால், நல்ல பலன் பெறுவீர்கள். 

இதையும் படிங்க: வீட்டில் எத்தனை வாசல்கள் இருந்தால் செல்வம் பெருகும்!! உங்க வீட்டு வாசல் இப்படி இருந்தா அமோகமா வாழலாம்!!

Latest Videos

click me!