படிகாரம் வீட்டில் வைப்பதால் மகிழ்ச்சி, செழுமை வீட்டில் நிலைக்கும். தொழில் மற்றும் வேலையிலும் வெற்றி பெறலாம். படிகாரம் வைத்து செய்யும் ஜோதிட பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்.
கடன் நீங்க பரிகாரம்
மலை போல குவிந்த கடனை பலமுறை முயற்சி செய்தும் அடைக்க முடியவில்லை என்றால், இந்த பரிகாரத்தை செய்யலாம். புதன் கிழமையன்று, ஒரு சிறிய துண்டு படிகாரத்தை எடுத்து, அதை இலையில் வைத்து நூலில் கட்டவும். புதன்கிழமை மாலை அரச மரத்தடியில் வைக்கவும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.