நமக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் எப்படி இருந்தாலும் சரி நம்மால் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லையெனில் நிச்சயமாக நாம் அவர்களுக்கு எதிரியாக மாறிவிடுவோம்.
இவர் மிகவும் நல்லவர், நல்ல குணம் படைத்தவர், பொய்யே கூற மாட்டார், இவர் சுயநலம் இல்லாதவர் என்று நம்மிடம் பழகியவர்கள் நம்மால் அவர்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என்று தெரிந்தால் அவர்கள் நம் மீது காட்டும் அக்கறை அல்லது நட்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போட்டி,பொறாமை ,திருஷ்டி என்று நீண்டு கொண்டே செல்லும். இப்படித்தான் நம்மில் பலரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியான சுயநலம் கொண்ட உலகத்தில் வாழும் நாம் இம்மாதிரியான பில்லி, சூனியம், திருஷ்டி மற்றும் எதிரி தொல்லையில் போன்றவைகளை பிறர் நமக்கு ஏற்படுத்துவதால் நாம் யாரை நம்பி பழக என்ற குழப்பம் கூட ஏற்பட்டு , யாருடன் பழகுவது என்று சில நேரங்களில் யோசிப்போம்.
ஆனால் இதற்கு எல்லாம் விடை வேண்டுமென்றால் அதே நேரத்தில் இவற்றில் இருந்து எல்லாம் விடுபட நம்மை படைத்த தெய்வத்தை நாம் நம்பியே ஆக வேண்டும்.
இப்படி நம்மை சுற்றியுள்ளவர்களின் கண் திருஷ்டி, பொறாமை ,எதிரி தொல்லை, வயிற்றெரிச்சல் ஆகியவற்றில் இருந்து நம்மை காக்கும் சக்த்தி வாய்ந்த பிரத்யங்கிரா தேவி வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.