Today Rasipalan 23rd Apr 2023: உங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டிய நேரம்..! திட்டங்களில் ரகசியம் காக்கவும்

Published : Apr 23, 2023, 05:30 AM IST

ஏப்ரல் 23ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 23rd Apr 2023: உங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டிய நேரம்..! திட்டங்களில் ரகசியம் காக்கவும்

மேஷம்:

முக்கியமான வேலையை முடிக்க இன்று சாதகமான நாள். உங்கள் ஆற்றலை சரியான வழியில் பயன்படுத்துங்கள். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் நடக்கும். அதிகமாக ஆலோசித்துக்கொண்டே இருப்பதால் வெற்றி நழுவலாம். 
 

212

ரிஷபம்:

பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். நெருங்கிய நண்பர் அல்லது உறவினரால் பிரச்னை ஏற்படலாம். உங்கள் தினசரி வழக்கமான வேலைகள் மற்றும் டயட்டில் கவனம் செலுத்தவும்.
 

312

மிதுனம்:

நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த ஒரு வேலை இன்று வெற்றிகரமாக நடந்துமுடியும். அதனால் சற்று நிம்மதி அடைவீர்கள். குழந்தைகள் மற்றும் குடும்ப பிரச்னைகளை தீர்க்க நேரம் ஒதுக்குங்கள். சிறுதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.  கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
 

412

கடகம்:

தற்போதைய சூழலை மனதில்வைத்து எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுங்கள். திட்டமிடல் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். மதியத்திற்கு மேல் உங்களுக்கு சாதகமான தினமாக இருக்கும். பட்ஜெட்டை கருத்தில்கொண்டு செலவு செய்யவும். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். 
 

512

சிம்மம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் செய்த ஒரு சிறப்பான வேலையால் சமூகத்தில் மதிப்பு உயரும். உணர்ச்சிவசப்பட வேண்டாம். மனதின்படி முடிவெடுக்காமல் மூளையின் பேச்சை கேட்டு முடிவெடுங்கள்.  கட்டுமான வேலைகளில் பிரச்னைகள் அல்லது தடங்கல்கள் ஏற்படலாம்.
 

612

கன்னி:

பொருளாதாரம் சார்ந்து எடுக்கும் முக்கியமான முடிவுகள் பாசிட்டிவான ரிசல்ட்டை கொடுக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று செயல்படவும். உங்கள் திட்டங்களையும், தொழில் உத்திகளையும் ரகசியமாக வைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். 
 

712

துலாம்:

இன்றைய தினம் நிம்மதியாக இருப்பீர்கள். நீங்கள் கைவிட்ட வேலை ஒன்று இன்று நடந்து முடியும். இளைஞர்கள் எதிர்காலத்திற்காக திட்டமிட வேண்டும். தொழில் வழக்கம்போல நடைபெறும். 
 

812

விருச்சிகம்:

இன்று முழுவதும் பரபரப்பாக இயங்குவீர்கள். ஒருவருக்கொருவர் ஐடியாக்களை பகிர்ந்துகொள்வது நல்லது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உதவி தேவைப்படும் நண்பருக்கு உதவுங்கள். தொழில் சார்ந்த எந்த முடிவும் எடுப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக சிந்திக்கவும்.
 

912

தனுசு:

நிறைவேறாத உங்கள் கனவு நிறைவேறும் நாள். இன்றைய கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்களுக்கு நெருங்கிய நபர் ஒருவரால் பிரச்னை ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
 

1012

மகரம்:

சொத்து வாங்க முயற்சித்து கொண்டிருந்தால் இன்று சொத்து வாங்குவதற்கான டீல் நல்லபடியாக நடந்துமுடியும். வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். மற்றவர்களின் வேலைகளில் தலையிடாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். 
 

1112

கும்பம்:

நேர்மறையான சிந்தனைகளுடன் இன்றைய தினத்தை தொடங்குவது நல்லது. அண்மைக்காலமாக இருந்துவந்த கவலைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.  ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம்.
 

1212

மீனம்:

வழக்கமான சோர்வளிக்கும் வேலைகளுக்கு மத்தியில் உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்து மகிழுங்கள். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர சரியான நேரம் இது. அது உங்கள் நம்பிக்கையையும் அதிகரிக்கும். வீட்டில் சிறிய விஷயங்களை பெரிதாக்காதீர்கள். 
 

Read more Photos on
click me!

Recommended Stories