Today Rasipalan 22nd Apr 2023: வருமானத்திற்கு புதிய வழி பிறக்கும்..! கடினமாக உழைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்

First Published | Apr 22, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 22ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

உங்கள் வேலைகளை முறையாக செய்து முடிப்பீர்கள். இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். செலவு செய்யும்போது பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படவும். வீடு தொடர்பான வேலைகளில் அதிக செலவாக வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இடம் மாறும் திட்டம் இருந்தால், உடனே மாறிவிடுங்கள். அதற்கேற்ற தினம் இன்று. வருவாய்க்கான புதிய வழி கிடைக்கும். பொருளாதார சூழல் மேம்படும். நெருங்கிய நண்பரின் அறிவுரை பல பிரச்னைகளை தீர்க்க உதவும். சட்டவிரோத வேலையில் ஆர்வம் காட்டினால் அவமானமே மிஞ்சும். 
 

Tap to resize

மிதுனம்:

பெரியவர்கள் அல்லது மரியாதைக்குரிய நபர்களுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபடாமல் பார்த்துக்கொள்ளவும். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிர்ஷ்டம் கூட கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். தொழிலில் ஆதாயம் தரும் செயலில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

கடகம்:

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் புத்திசாலித்தனமாக செயல்படுவது உங்கள் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கோபம், அவசரம் வேண்டாம். 

சிம்மம்:

சுய ஆய்வுக்கான நேரம் இது. உங்கள் கொள்கைப்படி நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும். முக்கியமான பொருள் தொலைந்துபோகும் அபாயம் உள்ளது. தொழில் சார்ந்த வெளிவேலைகளில் கவனம் செலுத்தவும். 
 

கன்னி:

சொத்து ரீதியான வேலைகளை பார்க்க சரியான நாள் இன்று. மன அழுத்தம் ஏற்படும். மனதை வலிமையாக வைத்துக்கொள்ளுங்கள். நெருக்கடியான சூழல் விரைவில் மாறும். பிரச்னைகளை கண்டு பயப்படாமல், தீர்வு காண முயற்சிக்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

துலாம்:

நேரத்தை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்துங்கள். மற்றவர்களை நம்ப வேண்டாம். பொறுப்புகளை நீங்கள் மட்டுமே சுமக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். 
 

விருச்சிகம்:

தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் மூலம் சாதிப்பீர்கள். மோசமான சூழல்கள் உருவாகும். ஆனால் அவற்றிற்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். எனவே கவலைப்படவேண்டாம். குழந்தைகளை சரியாக வழிநடத்தவும். தொழிலுக்கு சாதகமான தினம். ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.
 

தனுசு:

அண்மைக்காலமாக இருந்துவந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளுடன் அதிகம் பேச வேண்டாம். தொழில் ரீதியான அனைத்து வேலைகளும் எந்த தடங்கலுமின்றி முடியும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
 

மகரம்:

உங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம், கெரியரில் வளர்ச்சி ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். உங்கள் குறைகளை திருத்திக்கொள்ளவும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலையை வேகமாக செய்து முடிப்பீர்கள்.

கும்பம்:

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் பிரச்னை குறித்து நெருங்கிய நண்பருடன் ஆலோசனை செய்யுங்கள். தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

மீனம்:

பொருளாதார திட்டங்கள் மீது கவனம் செலுத்தவும். தேவையில்லாத செயல்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மற்றவர்களை அதிகம் நம்ப வேண்டாம். தொழிலில் புதிய திட்டங்கள் அல்லது புதிய வேலை வெற்றியை தராது.
 

Latest Videos

click me!