வீட்டிற்கு இந்த உயிரினங்கள் வருகிறதா? அப்போ நிச்சயம் செய்வினை இருக்கு!! கவனமாக இருங்க!!

First Published | Apr 21, 2023, 7:44 PM IST

உங்கள் வீட்டிற்கு சில உயிரினங்கள் வருவது வீட்டில் கெட்ட சக்திகளும், செய்வினை வைத்திருப்பதற்கான வாய்ப்புகளையும் குறிக்கிறது. 

கெட்ட சக்திகளை வசியம் செய்து ஏவி விடும் பூஜை முறையை தான் பில்லி, சூனியம், செய்வினை என்பார்கள். நம்முடைய வீட்டில் காரணமே இல்லாமல் பிரச்சனைகளும், வீட்டில் உள்ளவர்களுக்கு சுகவீனமும் அடிக்கடி ஏற்படும். இதனால் நமக்கு யாராவது செய்வினை வைத்திருப்பார்களோ என்ற எண்ணம் வரும். அதேபோல சில விலங்குகள் நம்முடைய வீட்டிற்கு வந்தாலும் செய்வினை இருப்பதாக சொல்லப்படுகிறது. விஷத்தை வெளியிடும் விலங்குகள் நம் வீட்டிற்கு வந்தால் பில்லி சூனியம் உள்ளதாக அர்த்தம். 

பாம்பு 
உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்தால் வீட்டில் மனக்கசப்பு ஏற்பட போகிறது என்று பொருள். உங்கள் வீட்டை சுற்றி பாம்புகள் காணப்பட்டால் அப்படி அர்த்தம் இல்லை. அவை வீட்டுக்குள் வருவது நல்லதல்ல. 

Tap to resize

கருவண்டு அல்லது கருங்குளவி 

இந்த உயிரினங்கள் நம்முடைய வீட்டிற்கு வந்தால் அல்லது நுழைய முயற்சி செய்தால் நமக்கு செய்வினை ஏவப்பட்டுள்ளதை குறிக்கும். இது வீட்டில் ஏதோ கெட்டது நடப்பதற்கான அறிகுறி. 

இதையும் படிங்க: தங்கம் குவிய! அட்சய திருதியை நாளில் இதை கண்டிப்பா செய்யுங்க! குபேரன், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்..

பூரான், வௌவால் 

உங்களுடைய இல்லத்தில் பூரான் நுழைந்தால் செய்வினை ஏவியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் உள்ள யாருக்காவது நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் சேறும், சகதியும் காணப்பட்டால் பூரான் வர வாய்ப்புள்ளது. இந்த மாதிரி காரணம் இல்லாமல் பூரான் வந்தால் உங்களுக்கு கஷ்டம் வர போகிறது. அதைப் போல வௌவால் வரக் கூடாது. இரத்த காயத்தோடு வௌவால் வீட்டில் நுழைந்தால் அது கெட்டதை தர போகிறது என்று பொருள். பகலில் வந்தால் செய்வினையால் வரும் இழப்பை குறிக்கும். 

இதையும் படிங்க: உங்க சம்பளத்தின் மீது கண் திருஷ்டி விழுதா? இந்த 1 காரியம் பண்ணுங்க! இனிமேல் கையில் காசு நிற்கும்!!

இப்படிப்பட்ட உயிரினங்கள் வீட்டுக்குள் நுழையாதபடி எப்போதும் வீட்டை பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுடைய வீட்டினை தூய்மையாகவும் கடவுள் வாசம் செய்கின்ற இடமாகவும் வையுங்கள்.  

Latest Videos

click me!