தங்கம் குவிய! அட்சய திருதியை நாளில் இதை கண்டிப்பா செய்யுங்க! குபேரன், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்..

First Published | Apr 21, 2023, 11:44 AM IST

அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி மகாவிஷ்ணு குபேரன் ஆகியோருக்கு செய்யும் வழிபாடுகள் நமக்கு செல்வத்தை வாரி வழங்கும். எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

சித்திரை மாதத்தின் முதல் அமாவாசையில் இருந்து 3ஆம் நாள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 3ஆம் எண்ணுடைய அதிபதி குரு, இவர் உலோகத்தில் தங்கத்தை குறிக்கிறார். பொன்னன் என்ற பெயரும் அவருக்கு உண்டு. ஆகவே தான் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க சொல்கிறார்கள். 2023ஆம் ஆண்டில் ஏப்ரல் 22ஆம் தேதியும், 22ஆம் தேதியும் திருதியை திதி இருக்கும் காரணத்தால் இரண்டு நாள்களில் தங்கம், மகாலட்சுமி வாசம் செய்யும் வெல்லம், உப்பு, பச்சரிசி உள்ளிட்ட வெண்மையான பொருள்களை வாங்கலாம். 

புராண கதை 

அட்சய திருதியை நாளில் தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாலட்சுமியும் திருமாலின் மார்பில் நீங்காமல் இணைந்தே இருப்பதற்கான நாள் அட்சய திருதியை நாள் தான். கிருதயுகம் பிறந்ததும் அட்சய திருதியை நாளில் தான். வனவாசம் செய்யும்போது, பாண்டவர்கள் அட்சய பாத்திரம் வரமாக பெற்றதும் அட்சய திருதியை நாளில் தான். அதே அட்சய திருதியை நாள் அன்றுதான் மணிமேகலை அட்சய பாத்திரம் வாங்கியதாக புராணம் கூறுகிறது. இப்படி அட்சய திருதியை அன்று பல புராண நிகழ்வுகள் நடந்துள்ளன. 

Tap to resize

அட்சய திருதியை நோக்கம் 

செல்வ யோகத்தை அருளும் மகாலட்சுமியின் ஆசியை பெறுவது தான், அட்சய திருதியை பண்டிகையின் மிக முக்கியமான நோக்கமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, நாராயணனின் நாமங்களை சொல்லிவிட்டு புதியதாக காரியங்களை தொடங்கி கொள்ளுங்கள். அட்சய திருதியை அன்று குழந்தைக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் சடங்கு செய்யலாம். எல்லோரும் வணங்கும் குபேரன் கூட அட்சய திருதியை நாளில் தான் மகாலட்சுமியை மனமுருகி பிரார்த்தனை செய்து செல்வத்தை பெருக்கினார் என்பது ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். அதனால் மகாலட்சுமிக்கு அன்றைய தினம் பூஜை செய்யுங்கள். 

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை!! 

அட்சய திருதியை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் பல தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த நம்முடைய மூதாதையர்களையும் சென்றடையும் என்பது ஐதீகம். ஆகவே இந்நாளில் செய்யும் பித்ருகடன் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும், புண்ணிய நீராடுவதும் கூடுதல் பலன்களை கொடுக்கும். 

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை!! 

அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வாசம் செய்யும் வெண்மை நிறப் பொருட்களை வாங்குவது வீட்டில் சுபிட்சம் உண்டாகும். மல்லி பூ, வெண்பட்டு உடை, வெள்ளை பால் பாயசம் ஆகியவை பயன்படுத்தலாம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை, உப்பு, மஞ்சள், நெல், அரிசி போன்றவையும் வாங்கிகொள்ளலாம். இவற்றை மகாலட்சுமி திருவுருவபடத்திற்கு முன்பு வைத்து வழிபடலாம். குபேரன் மாதிரி செல்வத்தை பெருக்கலாம். மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். 

இதையும் படிங்க: தவறுதலாக கூட இந்த நேரத்தில் தங்க நகையை அடகு வைக்காதீங்க! அப்புறம் மீட்கவே முடியாம போய்டும்!!

Latest Videos

click me!