அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!

First Published | Apr 21, 2023, 11:39 AM IST

அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்குவது நல்லது. அதே சமயத்தில் சில பொருட்களை தானமாக கொடுப்பது உங்களது வாழ்க்கையை முன்னேற்றும் என்பது ஐதீகம்.

சித்திரை மாதத்தின் வளர்பிறை காலத்தில் வரும் மூன்றாவது திதியானது திருதியை திதி. இந்த திதியில் தான் ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இடம்பெற்றாள். இதே நாளில்தான் அஷ்ட லட்சுமிகளும் தோன்றி சகல சௌபாக்கியங்களையும் அளிக்க தொடங்கினர். அதனால் இந்த நல்ல நாளில் தங்கம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும்.

2023 ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கு துவங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 வரை இருக்கும். அட்சய திருதியை நாளின் சிறப்பே இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றி பெரும்.

Tap to resize

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள், தானம் செய்யலாம். தானம் செய்வதால், நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கணவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்பும் மனைவிகள் அட்சய திருதியை அன்று குங்குமத்தை தானமாக வழங்கலாம்.

இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023: இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?

குடும்ப வாழ்க்கை இதனால் மகிழ்ச்சியாக மாறும். வெல்லம், நெய் மற்றும் உப்பு ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அதேபோல தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.

மேலும், செல்வ செழிப்பையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற விரும்புவோர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், சந்தனத்தை தானம் செய்யலாம். தானம் செய்வது உங்களை உயர்த்தும் என்று கூறுகிறது ஜோதிடம். அதன்படி, அட்சய திருதியை அன்று உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்து மகிழுங்கள்.

இதையும் படிங்க: உங்க கையில் பணம் சேர! இந்த 7 பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்! அதிர்ஷ்டம் தேடி வரும்..

Latest Videos

click me!