உங்க சம்பளத்தின் மீது கண் திருஷ்டி விழுதா? இந்த 1 காரியம் பண்ணுங்க! இனிமேல் கையில் காசு நிற்கும்!!

First Published | Apr 21, 2023, 3:53 PM IST

நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், நாம் சம்பாதிக்கும் பணம் கையில் தங்காமல் போவதற்கு கண் திருஷ்டி காரணமாக இருக்கும். அதை போக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை இங்கு காணலாம். 

நாம் கடினமாக உழைப்பதெல்லாம் கைநிறைய பணம் சம்பாதிப்பதற்கு தான். ஆனால் அந்த பணம் கையில் தாங்காமல் போனால் எவ்வளவு வேதனையாக இருக்கும். நம்முடைய உழைப்பு பிறர் கண்ணுக்கு தெரியாது. ஆனால் கைக்கு வரும் சம்பளம் தான் அவர்களுக்கு தெரியும். அவர்களின் கெட்ட கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டி இருக்கிறது. நம் மீது மற்றவர்கள் வயிற்றெரிச்சல் படாமல் இருக்க இந்த பரிகாரங்கள் நமக்கு உதவும். 

நம் வீட்டில் பயன்படுத்தும் மிளகு 5 உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே வீட்டு வாசலுக்கு நேரடியாக சென்று, கிழக்கு நோக்கியபடி நின்று, உங்கள் தலையை 7 முறை இடமிருந்து வலம், வலமிருந்து இடமாக சுற்றுங்கள். பின்னர் மேலும், கீழும் அப்படியே 7 முறை ஏற்றி இறக்குங்கள். இதை செய்தபிறகு உங்கள் கையில் வைத்திருக்கும் 5 மிளகில் 4 மிளகுகளை 4 திசைக்கும் தூக்கி எறிய வேண்டும். மீதம் கையில் உள்ள 1 மிளகை வானத்தை பார்த்து அதாவது மேலே தூக்கி வீசுங்கள். இந்த மிளகை எவ்வளவு தூரமாக தூக்கி வீசுகிறீர்களோ அவ்வளவு தொலைவில் உங்களுடைய கண் திருஷ்டி விலகி ஓடும். பரிகாரத்தை செய்யும் போது குலதெய்வத்தை நினைத்து கொள்ளுங்கள். குலம் காக்கும் தெய்வங்கள் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும். 

Tap to resize

இந்த பரிகாரத்தை அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செய்யுங்கள். அதுவும் பகல் வேளைகளில் இல்லாமல் மாலை 6.30 மணிக்கு மேலாக எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை வீட்டு வாசலுக்கு வெளியே நின்று செய்ய வேண்டும். ஆகவே உங்களுடைய தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல் செய்தாலும் நல்லது. 

சம்பளத்தின் மீது உள்ள கண் திருஷ்டி மட்டுமில்லை, குழந்தைகள் மீதான கண்திருஷ்டி, தொழில் மீதான கண் திருஷ்டி ஆகியவற்றிற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடை அடைக்கும் போது இதனை செய்வதால் கடையின் மீது உள்ள கண் திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. 

Latest Videos

click me!