மேஷம்:
நீங்கள் நினைத்த இலக்கை அடைய தீவிரமாக உழைப்பீர்கள். இளைஞர்கள் நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். சட்டவிரோத செயல்களை தவிர்க்கவும்.
ரிஷபம்:
மனதளவில் நேர்மறையான மாற்றத்தையும் திருத்தத்தையும் செய்வீர்கள். நீண்டகால கவலை நீங்கும். குழந்தைகளின் அட்மிஷன் குறித்து கவலை கொள்வீர்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களை நம்பாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள்.
மிதுனம்:
பெரியவர்களின் அறிவுரையும் வழிகாட்டுதலும் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். வீட்டு பராமரிப்பு வேலைகளில் அதிருப்தி அடைவீர்கள். பயணம் பிரச்னைகளை தருமே தவிர, ஆதாயம் தராது. எனவே பயணங்களை தவிர்க்கவும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.
கடகம்:
பரம்பரை சொத்து பிரச்னை தீரும். உறவுகள் மேம்படும். பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படவும். தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி ஆற்றலை வீணடிக்காதீர்கள்.
சிம்மம்:
உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்தால் வெற்றி நிச்சயம். புதிதாக கார் வாங்க நினைத்தால் உடனே வாங்கிவிடுங்கள். இதுவே சரியான நேரம். நீங்கள் மனதில் நினைத்த வெற்றி தொழிலில் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
கன்னி:
உங்கள் முழு திறமையையும் பயன்படுத்துங்கள். நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. எதிராளி அல்லது போட்டியாளரின் நகர்வுகளை கவனியுங்கள். கொஞ்சம் சுயநலமாக இருந்தால் தான் உங்கள் வேலையை செய்து முடிக்க முடியும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
துலாம்:
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பு சம்மந்தமான நற்செய்தி கிடைக்கும். ஈகோவை தவிர்க்கவும். கவனக்குறைவால் எந்த வேலையையும் பாதியில் நிறுத்த வேண்டாம். முழு வேலையையும் செய்து முடிக்கவும். புதிய வேலையை தொடங்க இன்று சரியான நாள்.
விருச்சிகம்:
உங்கள் பொறுப்புகளின் மீது கவனமாக இருக்கவும். நேரத்தை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மதிப்பளிக்கவும். தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
தனுசு:
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களுக்குள் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் முக்கியமான முடிவெடுப்பீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக சகோதரர்களுடனான இடைவெளி அதிகரிக்கும். சொத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் வெற்றி கிடைக்கும்.
மகரம்:
வீடு மாற விரும்பினால் மாறுங்கள். அதற்கு சரியான நேரம் இது. ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். அறிமுகமில்லாத நபர்களுடனான தொடர்பு பிரச்னையை ஏற்படுத்தலாம். பட்ஜெட்டை மனதில்வைத்து செயல்படவும். தொழில் ரீதியாக எந்த முடிவும் எடுக்கும் முன் ஆலோசனை செய்யவும்.
கும்பம்:
உங்களது வழக்கமான தினசரி நடவடிக்கைகளிலிருந்து ஒரு பிரேக் எடுக்க, உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் உங்கள் முழு முயற்சியால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மீனம்:
குழந்தைகளால் இருந்துவந்த கவலை நீங்கும். பிரச்னையில் இருந்த உங்கள் பணம் இன்று வந்துசேரும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். தொழிலில் அனுபவமான ஊழியர்களின் முடிவுகளை ஏற்று செயல்படுங்கள். கணவன் - மனைவி பிரச்னையை அவர்களே வீட்டுக்குள் தீர்த்துக்கொள்வார்கள்.